உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

179


அடைத்தான் விச்சியர் குடியில் வாழ்ந்த மன்னன் ஒருவன் என்ற வழக்குடையது அவன் குடி. அதனால் தான், விச்சிக்கோனின் தம்பி இளவிச்சிக்கோ தன் நண்பன் இளங்கண்டீரக்கோவுடன் ஒருங்கிருந்த போது ஆண்டு வந்த புலவர் பெருந்தலைச் சாத்தனார், இளங்கண்டீரக்கோவை மட்டும் அன்புடன் தழுவி, விச்சிக்கோன் இளவலைத் தழுவாதே சென்றார்215

88. விரான்

வயல் வளம் நிறையப் பெற்ற இருப்பை என்ற ஊரின் தலைவன் விரான் என்பான். புதுக்கோட்டையைச் சார்ந்த விராலி மலை இவன் பெயரால் அழைக்கப் பெற்ற மலையாகவும், அம் மலையைச் சார்ந்துள்ள இருப்பையூர், இவன் ஆண்ட இருப்பையாகவும் இருக்கக்கூடும் என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. நெல் வளம் செறிந்த இருப்பை ஆண்ட விரான் பெரு வீரனாக விளங்கினான். பகை கொண்டு படையோடு வருவாரை பாழாக்க வல்ல பெரு வலிவு கொண்டவன். பரிசில் வேண்டி வருவார்க்கு வரையாது வழங்கும் வள்ளலாகவும் விளங்கிப் புகழ் பெற்றவன் விரான்216

89. வெளிமான்

புலவர் போற்றும் பெருங்கொடை வள்ளலாக வாழ்ந்தவன் வெளிமான் உடல் தளர்ந்து உயிர் பிரியும், நிலையிலும், பரிசிலர்க்கு பொருள் ஈயும் உள்ளம் உடையவன். குமணனிள் காலத்தில் வாழ்ந்திருந்தவன். வெளிமான் புகழ் கேட்டு அவனைப் பாடிப் பரிசில் பெற வந்தார் புலவர் பெருஞ்சித்திரனார். அக்காலை,