பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

பொருளை விளங்கப் பாடியுள்ளமையால் இப்பெயர் பெற்றார். ஆண் மகன், பகைவராலும் போற்றப்படும் சிறந்தவனே எனினும், ["செறுநரும் விழையும் செம்மலோன்",] பரத்தையர் தொடர்பு கொள்ளுதல் போலும் பழிதரு செயல் செய்வனாகிவிடின், தலைமகளே அல்லாமல் அவள் தோழியர்களாலும் "நாணிலி" எனப் பழிக்கப்பட்டுவிடுவான் என்பதை அறிவித்துள்ளார்.85

அஃதை எனும் பெயருடைய சோழன் ஒருவன், பருவூரில் நடந்த போர்க்களத்தில் சேர, பாண்டியப் பெருவேந்தர்களை வென்று, அவர்தம் களிற்றுப்படைகளைக் கவர்ந்து கொண்ட வரலாறு உணரவும் துணை புரிந்துள்ளார்.86

முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்

சேரர் குடிவந்தவராயினும், உடல்நலக் குறைவாலோ, அல்லது வேறுபிற காரணத்தாலோ செயல் இழந்துகிடந்த நிலையிலும், பாடல்பாட மறந்துவிடவில்லை. அவர் பாடிய பாட்டு ஒன்றேஆயினும்87 (அகம் :30) அதில் மீனவர்தம் தொழில்வளம், அவர்தம் கொடை வளம், அதேபோல் உழவர் தொழில் வளம், அவர்தம் கொடை வளங்களையும், தன் தோழியின் காதலன் வரத்தவறியபோது, அவனைக்கண்டு,"வந்துசென்றால் உன் பெருமை கெட்டுவிடுமோ?" எனக் கடிந்துகேட்கும் சிறப்பையும் விளக்கியுள்ளார்.