பக்கம்:தமிழக வரலாறு.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசயநகர வேந்தரும் மராட்டியரும்

315


திருமாலைப் போற்றும் வைணவப் பரம்பரையில் விசயநகர வேந்தர்கள் வந்தவர்கள்; எனவே, எங்கும் திருமால் வழிபாடு மிக்கிருந்தது எனலாம். தமிழ்நாட்டில் பிரபந்தம் ஒதுவார், சிறக்க ஓதி இறைவனை வழிபட்டனர். அது போன்றே சைவர்களும் திருமுறைகளை ஓதி உணர்ந்து சிவனை வழி பட்டனர்.

வடநாட்டு இசுலாமியர் தம் படையெடுப்புக்களால் தென்னாட்டுச் சைவ வைணவ சமயங்கள் சீர்குலைந்தன என்றும், அவற்றைச் செப்பம் செய்து இந்து சமயத்தை நிலைநாட்டவே விசயநகர வேந்தர்கள் முயன்றார்கள் என்றும் மேலே கண்டோம் அந்தப் பதினான்காம் நூற்றாண்டில் தேவகிரி யாதவரும், வாரங்கல் காகேதீயரும், தேவசமுத்திர ஹொய்சளரும், தெற்கே பாண்டியரும் தம்முள் மாறுபட்டுக் கலவரம் விளைத்து நின்றமையே வடக்கிருந்து வந்த இசுலாமியர் வரவை எளிதாக்கிற்று. எனினும், விசயநகர வேந்தர் ஒரளவு அவர்தம் இசுலாமிய ஆளுகையைக் குறைத்து சைவ வைணவ [1]சமயங்களை வளர்த்தார்கள். இவ்வாறு மாற்றானுக்கு இடங்கொடாது தம் சமய நெறியைப் பரப்பி நின்ற காரணத்தால், தம் சமயம் பற்றிய புதுப்புது நூல்களும், பழைய நூல்களுக்கு விளக்கங்களும்-வியாக்கியானங்களும்-தேவைப்பட்டன. வேதாந்த தேசிகர் போன்ற சமய விளக்க ஆச்சாரியர்கள் இக்காலத்தில் வாழ்ந்து சமயத்தை வளர்த்தார்கள். விசயநகரவேந்தர்கள் வைண வராயினும் இன்றே போல் அன்றும் நாட்டில் சைவர்கள் பெரும்பாலராய் இருந்தனர். சங்கரரைப் பின்பற்றி வழி பாடாற்றும் அத்வைதிகளும், ஆகமங்களைப் போற்றும் பாசுபதர்களும் வீர சைவர்களும் இருந்தார்களாயினும், அவர்கள் சிறக்கவில்லை எனலாம். பெரும்பாலும் பரந்த நோக்குள்ள சைவ சித்தாந்த முறையினைப் பின்பற்றும்


  1. l. Administration & Social Life under Vijayanagar, Empire p.297
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/317&oldid=1358810" இலிருந்து மீள்விக்கப்பட்டது