பக்கம்:தமிழக வரலாறு.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

368

தமிழக வரலாறு



இந்த ஆண்டுகளிலெல்லாம் தமிழ்நாட்டில் காங்கிரஸ் வீணே காலம் கழிக்கவில்லை. 1927ல் சென்னையில் அகில இந்தியக் காங்கிரஸ் நடைபெற்றது. அக்காலத்தில் தமிழ் நாடு தன் முழுப் பொறுப்பில் எல்லாப் பணிகளையும் ஏற்று, வருங்காலத்தை உருவாக்கத் திட்டமிட்டது. அதற்கு முன்பிருந்தே S சீனிவா ஐயங்கார், S. சத்தியமூர்த்தி, C. இராசகோபாலாசாரி யார் ஆகியோர் நாட்டில் காங்கிரஸ் நன்கு வளரப் பாடுபட்டு வந்தனர்.

புதிய ஆட்சி முறைகள்:

1930இல் காந்தி அடிகள் வடநாட்டில் உப்புச் சத்தியாக்கிரகம் தொடங்கினார் தண்டியாத்திரை என்பது வரலாற்றில் சிறந்த இடம் பெற்ற ஒன்று; அதே வேளையில் இங்குத் தமிழ் நாட்டிலும் வேதாரணியத்தில் தலைவர்கள் உப்புக் காய்ச்சும் திட்டத்தில் ஈடுபட்டனர் அதனால் பலர் சிறை சென்றனர். காங்கிரஸ் உழைப்பினாலே நாட்டில் உண்டாகிய மாற்றத்தைக் கண்ட ஆங்கிலேயர்கள் இந்திய நாட்டிற்கு அவ்வப்போது மாறுபட்ட அரசியல் முறைகளைப் புகுத்த நினைத்துப் பல ஏற்பாடுகளைச் செய்தனர். அவற்றுள் ஒன்று 1935ல் கொண்டு வந்த மாகாண சுய ஆட்சித் திட்டமாகும். அதன் மூலமாக மாகாணங்களில் சட்ட சபைக்கு உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பெற வேண்டும். அச்சபைகள் கவர்னர்களுக்கு உட்பட்டே பணியாற்ற வேண்டும். இந்த முறையைக் காங்கிரஸ்காரர்கள் தீவிரமாக எதிர்த்தனர் தமிழ்நாட்டில் தலைவராய் இருந்த சத்தியமூர்த்தியவர்கள் காங்கிரசு மகாசபைக் கூட்டத்தில் அந்தப் புதிய முறையை ஏற்றுக்கொண்டு ஆட்சிக்குள் புகுந்து போராட வேண்டும் என்று வற்புறுத்தினார். நேரு உட்படப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/370&oldid=1359079" இலிருந்து மீள்விக்கப்பட்டது