பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்று முறையிட, அவன், அம்முதுகோசர் குலத்தையே அழித்துவிட்டான்சி முதுகோசர் வாழ்வும் முடிந்து விட்டது அந் நிகழ்ச்சிக்குப் பின்னர், அம் முதுகோசர் வாழ்க்கை பற்றி மெளனமாகி விட்டன சங்க இலக்கியங்களும். முது கோசர்களுக்கு நேர்ந்து விட்ட கதியினைக் கண் ணெ திரில் கண்ணுற்றனர், அம்முதுகோசர்போலவே கிழ்க் கடற்கரை நகரங்களாம் செல்லூர் நியமம் போன்றவற்றில் வாழ்ந்திருந்த இளங்கோசர், இளங்கோசர் தமிழகத்துக் கிழக்குக் கடற்கண் வாழ்ந்திருந்தனர் என்பதை அவர்கள் பாண்டியர் படையில் பணியாற்றியதை உறுதி செய்யும் மதுரைக் காஞ்சி அவர்களை, இளம்பல் கோசர் எனக் கூறுவதே உறுதி செய்யும்." முது கோசர் கதியினைக் கண்டு அவர்கள் கலங்கி விட்டனர். ஈண்டே இருந்தால் தமக்கும் அதே கதிதான் நேரும் என அஞ்சினர் போலும், அதனால் கீழ்க் கடற்குச் சேய்மைக் கண்ணதான மேலைக் கடற்கரையைச் சேர்ந்த துளுநாடு சென்று வாழ்ந்தனர், குதிரை மலைச்சாரலில் படைப் பயிற்சி பெற்றனர். - - கொங்கில் கண்ணகிக்கு விழா எடுத்த கோசரும், பிட்டங் கொற்றனுக்கு உரிய குதிரைமலைக்கு அணித் தாகப் போர் பயிற்சி பெற்ற கோசரும் முறையே கொங் கிளங் கோசர், இளம்பல் கோசர்' என்றே அழைக்கப் பட்டிருப்பதும் காண்க. சங்க இலக்கியங்கள் தரும் வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டு நோக்கிய வழி கோசர் வரலாறாகத் தெரிவது இவ்வளவே. ஆகவே கொங்கு நாட்டைத் தங்கள் நிலைத்த வாழிடமாகக் கொண்டு வாழ்ந்திருந்த கொங்கர் வேறு; கீழ்க் கடற் கரைக்கண் வாழ அஞ்சிப் புகலிடம் தேடி கொங்கு நாடு சென்று வாழ்ந்த இளங் கோசர் வேறு: கொங்கரும் கோசரும் ஓரினத்தவர் அல்லர்: கொங்கர் வேறு, கோசர் வேறு. - - 122