பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. மோகூர் யாண்டுளது? சங்க இலக்கியப் பாடல்களில் பழையன் மாறனின் தலைநகராக கூறப்படும் மோகூர் யாண்டுள்ளது என்பதை ஆராய்ந்த வரலாற்று நூலாசிரியர்களிடையே ஒத் த கருத்து இல்லை, தமிழ்நாட்டு வரலாற்றுக் குழு தொகுத்து, தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்காக தமிழ் நாட்டுப் பாட நூல் நிறுவனம் 1983ல் வெளியிட்ட தமிழ் நாட்டு வரலாறு. சங்ககாலம்-அரசியல்' என்ற நூலில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ள வரலாற்று ஆய்வாளர்களிடையே கூட மோகூர் யாண்டுளது என்பதில் ஒத்த கருத்து காணப்பட வில்லை. -

தமிழ்நாட்டு வரலாறு : சங்ககாலம்-அரசியல்’ நூலில் அடிப்படைச் சான்றுகள்-1’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ள டாக்டர் சி. ஈ. இராமச்சந்திரன் அவர்கள் மோகூர்’ கொங்கு நாட்டில் உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார். .

அதே நூலில் 'கொங்கர்’ என்ற தலைப்பிட்ட கட்டுரை எழுதியுள்ள, அந் நூ லி ன் பதிப்பாசிரியர். டாக்டர் அ. கிருட்டிண சாமி அவர்கள் கொங்கு நாட்டுச் சேலம் மாவட்டத்து நாமக்கல்லிற்குத் த்ெற்கில் காவியிரின் வட கரையில் மோகனூர் என்னும் ஊர் இருக்கிறது. இதன் பழைய பெயராகிய மோகூர், இப்பொழுது மோகனூர் எனத்திரிந்து வழங்குகிறது' எனக் கருத்தறிவித்துள்ளார். 19