பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. திதியன்

திதியின் எனும் பெயருடையார் பலர் வாழ்ந்திருந்தனராக, சங்க நூல்கள் கூறுகின்றன.

1. அழுந்தைத் திதியன் :

கோசர், நாடோடி வாழ்க்கையை விடுத்து நிலைத்த குடியினராய் வாழத் தொடங்கி காடுகளை அழித்துப்பண்படுத்தி; உழுது பயறு விளைத்திருந்தனர். அன்னி மிஞிலி எனும் பெயருடையாள் ஒருத்தியின் தந்தை அந்நிலத்தை அடுத்துள்ள இடங்களில் தன் பசுக்களை மேய விட்டிருந்தார். அப்பசுக்களில் சில கோசர்க்குரிய நிலத்தில் புகுந்து விட்டன. அச்சிறு குற்றத்திற்காக அன்னிமிஞிலியின் தந்தை கண்களை அழித்துச் சிறுமை செய்தனர் கோசர் கோசரின் அக்கொடுஞ் செயல் கண்டு சினம் கொண்ட அன்னி மிஞிலி, “என் தந்தையின் கண்களைப் போக்கிய அக்கோசர். உயிரைப் போக்காது, உண்ணலும் உண்ணேன், உடுத்தலும் செய்யேன்’ என வஞ்சினம் உரைத்து, அவரை அழிக்க வல்லான் அழுந்தை வாழ் திதியனே என அறிந்து, அவன் பாற் சென்று தன் குறை கூறினாள்.

திதியனும், அவள் பொருட்டு அத்தவறு செய்தாரைக் கொன்று முரண்போக்கினான். கோசர் அழிவு கண்டு அன்னி மிஞிலி அகமகிழ்ந்தாள்.

74