பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசம் ஆகி விட்டது. பழையன் மாறன், பின் மோகூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வரலானான். சோழன் கிள்ளிவளவன், பசும்பூண் பாண்டியன் என்பவனைப் பாண்டி நாட்டிற்கு அரசனாகச் சிலகாலம் ஆண்டு வரச் செய்தான். . பசும் பூண் பாண்டியன் சோழருக்கு உட்பட்டு அவர் களுக்குத் திறை செலுத்திக் கொண்டு நாட்டை ஆண்டு வந்திருக்கலாம். இந்நிலை பாண்டியரின் விடுதலை உணர்வைத் துண்டித் தன்னாட்சி பெறும் மனப்பான் மையை வளர்த்தது. இந்த உயர்வே வெற்றி வேற் செழி யன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழி யன் என்ற நிலையில் நமக்கு அறிமுகமாகி, மதுரையை ஆண்ட நிகழ்ச்சியில் முடிந்தது - என்றெல்லாம் அகச் சான்று எதுவும் காட்டாது அகச்சான்று அளிக்கும் வரலாற்று நிகழ்ச்சிகளுக்கு முரணான செய்திகளைக் கூறியிருப்பது வருந்துதற்குரிய ஒன்று. கிள்ளி வளவன் என்ற பொலம்பூண் கிள்ளிக்கும், பழையன் மாறனுக்கும், கூடல் நகர் அருகே நடைபெற்ற போரே, தலையாலங்கானத்துச் .ெ ச ரு .ெ வ ன் ற நெடுஞ்செழியன் காலத்தில் தான் நடந்தது. அங்ங்னமாகவும், அவனை அப்போருக்கும் பிற்பட்டவனாகக் காட்டியிருப்பது சரியான வரலாற்று ஆய்வு முடிவு அல்ல. பழையன் மாறன், தலையாலங்காலத்தவனின் படைத் தலைவன் என்பதை திரு. மயிலை, சீனி. வேங்கடசாமி யவர்களே ஒப்புக் கொண்டுள்ளார். அதே கட்டுரையின், இரண்டாம் அடிக்குறிப்பில் “பழையன் மாறன் என்னும் பெயர் கொண்ட ஒருவன் பாண்டியன் தலையாலங்கானத் 85