பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

<poem>"தந்தையும் அன்னைக் கேற்பச் 'சரி'யென்று பாடு கின்றார்; சொந்தமும் பணமும் கண்டா நெஞ்சத்தில் காதல் தோன்றும்? என்றனக் குரிய காதல் துணைவனை அடையே னாகில் இந்தநற் குவளை தின்றே இறந்தொழிந்திடுவேன்!"என்றாள்

                           ‌24

< Poem>இவையெலாம்கேட்டி ருந்த தமிழச்சி சிரித்துச் சொல்வாள்: "சுவையிலா வாழ்வில் உன்னைத் துார்த்திட நினைத்தாள் உன்தாய்; அவளினும் அறிவில் லாத பேதைநீ! அதனால் அன்றோ குவளையைத் தின்(று)இ றக்கத் துணிந்தனை! தமிழ்ப்பெண்ணே!

     ‌                     25

<Poem>"ஒன்றுநான்சொல்வதைக்கேள்: உயிருடல் அவனுக் காக அன்றுநீ கொடுத்தேன் என்றாய்; அதிலுனக் குரிமை இல்லை; இன்றைய நிலையை மாற்ற - இறப்பதா?வேண்டாம்!வேண்டாம்! கொன்றிட வேண்டும் தீமை குறுக்கிட்டால்! எடடீ வாளை! 26

           10