பக்கம்:தமிழஞ்சலி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி அத்தகைய கடலிலே புகுந்து, அழகழகான முத்துக்களையும் - பவழங்களையும் தேடிப் பெற்றுவிட்ட தென்றலே. உன்னை எவ்வாறு உலகிற்கு புகழ்ந்து காட்டுவேன்! இலக்கியக் கடலினுள் மட்டுமா புகுந்தாய்? அதன் உச்சியிலேயே ஆனந்தத் தாண்டவமாடிப், புதியதொரு இலக்கியப் பரம்பரை யினையே உருவாக்கிவிட்ட, உன் பெருமை வாழ்க! கடல்மேல் பரதமாடிய தென்றலே, அத்தோடு மட்டுமா நின்றாய்? விரிந்து பரந்து கிடக்கும் இலக்கியச் சோலைகளுள்ளும் - புகுந்து விட்டாய்! நீ போக முடியாத இடம் ஏது? அந்தச் சோலையினுள்ளிருக்கும் பற்பல இலக்கிய உள்ளங்கள் என்ற மலர்களின் நறுமணத்தை உன்னோடு சேர்த்துக் கொண்டாய்! மதுரைத் தமிழ்ச் சங்கங்களில், முன்பு எப்படி தமிழ் இலக்கியங்கள் வளர்ந்தனவோ, அதைப் போன்ற நிலையை நாட்டிலே உருவாக்கி விட்டாயே! உன் செயற்கரிய செயலால் நாவலர்களும், பாவலர்களும் கலைஞர்களும், கவிஞர்களும் இலக்கிய உணர்வு பெற்று நாட்டை இலக்கியப் பூக்காடாக்கி விட்டார்கள். அந்த அகமகிழ்வோடு, சோலையிலே புகுந்து தென் றலே. நீ கத்தி போன்ற தாழை மடல்களையெல்லாம் 138

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/148&oldid=863493" இலிருந்து மீள்விக்கப்பட்டது