பக்கம்:தமிழஞ்சலி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி தாயான தெங்கிற்குச் சேய், சிரிக்கும் அதன் இளம்பாளை, அந்தப் பாளையிலே வழிந்தோடும் "சேய்மை அழகை நீ சுவைத்து, அந்த மகிழ்ச்சிக் களையை - இந்த மொழித் துரோகிகட்கும் - உணர்த்த - அன்பூட்ட விரும்பினாயோ? தாயிற்கு ஏற்பட்ட மானத்தைத் தடுப்பது சேயின் கடமை என்பதை உலகுக்கும் - இந்த துரோகிகட்கும் அறிவு உணர்த்தத்தான், அந்த இளம்பாளையை, தென்றலே நீ தழுவி - நாட்டிற்கும் தழுவ விட்டாயோ! அடடா, தென்றலே! உன் சேவையே சேவை! மக்களுக்காக நீ ஆற்றும் தொண்டே, தொண்டு! சமுதாயம் அறிவுபெற - உணர்வுற - தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ - எங்கெங்கெல்லாம் நீதிநெறிகள் தவழ்ந்தாடுகின்றனவோ, அங்கெல்லாம் நீ சென்று, அவற்றை எமக்கு அளிக்கிறாயே! உனக்கு என்ன கைம்மாறு செய்வோம், வாழ்க என்ற வளமான சொல் ஒன்றைத் தவிர! தென்றலே தமிழ்த் தரணியின் அணுவிலெல்லாம் நீ தவழ்ந்து, அற நெறிகளை ஏற்று, மாலை நேரமானதும் தமிழக வீதிகளை நோக்கி ஓடி வருகிறாயே, ஏன்? அதை நான் உணர்கிறேன் - நாடும் அறிகிறது! இருந்தாலும் உன் புகழையன்றோ எழுத முனைந்து விட்டேன். 142

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/152&oldid=863498" இலிருந்து மீள்விக்கப்பட்டது