பக்கம்:தமிழஞ்சலி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி பிறந்தவனைத் தவிர - தாய்மைக்குப் பிறந்தவன் ஒப்புக் கொள்கிறான். நாடும் - மொழியும், ஒரு சமுதாயத்தின் ஆத்மா என்று - மொழி நூல் வல்லுநர்கள் மொழிகிறார்கள். அதனை உறக்கம் தெளிவிக்க வேண்டியது அறிஞனுடைய சுபாவம் - என்றுகூடச் சொல்லலாம். அப்படிப்பட்டவனைவிட அண்ணா என்ன செய்தார் என்றால், ஈவு - இரக்கம் - கருணை - அருளை - தன்நெஞ்சில் பாத்திகட்டி வளர்த்தார். அதுமட்டுமல்ல, பொட்டல் காட்டிலே புதையலை எடுத்தார். குப்பை மேட்டைக் கோபுரமாக்கினார். சப்பைகளை சாம்சன் என்ற நிலைக்குக் கொண்டு வந்தார். அண்ணா, எல்லாருடைய நரம்புகளிலும் ஒடும் சிவப்பு அணுக்களாக நிற்கிறார். ஒரு மனிதனை சாவு விழுங்கும். அதைக் கண்டு சுற்றம் அழும் - சந்ததி தேம்பும்! இறந்தது பிழைப்பதில்லை என்று தெரிந்த பிறகு, கண்கள் அழுகின்ற புத்தியை விடுவதில்லை. மனித குணங்கள் சூழ்நிலையில் சாகும்போது - அண்ணா அழுதார்: பாசத்திற்கும் அவருக்குமுள்ள பந்தம் - பாலுக்கும் அதன் வெள்ளைக்கும் உள்ள தொடர்பாகும் - அவ்வளவு நெருக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/18&oldid=863528" இலிருந்து மீள்விக்கப்பட்டது