பக்கம்:தமிழஞ்சலி.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி எனது உடலைப் பார்த்தாயா? வாழ்க்கையின் வெடிப் பும் - வறுமையின் கீறலும் - துன்ப வடுவும் - அதிலே, சோக ரேகைகளோடு பின்னிக் கிடக்கின்றன! அக்கினித் தழலால் வெந்து போன என் மனம், உனது அருள் மருந்துக்காகக் காத்துக் கிடக்கின்றது. இந்த நாட்டின் ஜீவநாடி என்று, உன்னைக் கூறுகிறார்கள். எந்தக் காலத்திலும், நீ - துரங்கி அறியாதக் கண்களை வைத்துக் கொண்டிருப்பவள். நோஞ்சானுக்கு நேசக்கரமும் - எதிரிக்கு வீரக்கரமும் நீட்டுபவள். இப்போது என் நிலை, பயங்கரமான அரசியல் முட்காட்டில் செல்லுபவனைப்போல் இருக்கிறது. நான் , மேற்கொண்டு எனது பயணத்தைத் தொடர்வதற்கு முன்னால், நீ வந்து என்னை அள்ளி எடுத்து, உன் இதயக் கடலிலே மிதக்கவிடு. சிறுவர்களின் கோரிக்கைக்கும் - சூழ்நிலை என்ற சுழலுக்கும் - நான் பலியாகாமுன், உன் உள்ளக் கடலில் - என்னை உலாவவிடு. தாயே! ஆடி மாதம் ஒரு நாள்! உன்னுடைய பிறந்த நாள் வந்தது! அப்போது உன் அழகைப் பார்க்கப் பொன்னிப் பெருக்கெடுத்து வரும்போது நானும் வந்தேன். | 84

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/194&oldid=863544" இலிருந்து மீள்விக்கப்பட்டது