பக்கம்:தமிழஞ்சலி.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி குகையின் இடுக்கில் பாய்ந்து வரும் சூரிய ஒளியை, அந்த பூச்சிகள் தாங்குகின்ற சக்தியற்றவைகளாக உள்ளன. ஒளியிழை சிறிதளவு வந்தால் கூட, பூச்சிகள் ஒடி ஒளிகின்றன. மனிதன் இப்படித்தான் இன்று வாழ்கிறான் பாவம்! நல்ல கருத்துக்களில் ஒர் அணுவைக் கூட அவனால் ஜீரணம் செய்ய முடியவில்லை. அவனைத் தூக்கி விடுகின்ற சக்தி எங்கிருந்து வரும்? இந்த கேள்வியை, இன்று தத்துவம் கேட்டுக் கொண்டிருக்கிறது. கந்தல் துணி வழியாகப் பிய்த்துக் கொண்டு வெளியே வரும் ஒளியைப்போல் - சிதறியிருக்கும் மேகத்தின் வழி யாக, ஒளி தொடுவானிலிருந்து புறப்படுகிறது. அதனைக் கண்டு எந்த மனிதனும் பயந்து ஒடு வதில்லை. ஆனால், கருத்தைக் கண்டு பயந்து இடு கிறான். அவன், குகையில் வாழும் பூச்சி! தொடுவான் ஒளியிலே நனைபவன், உலகத்திலே வாழும் நல்ல மூச்சு! அண்ணாவின் கருத்துக்கள், பல நேரத்தில் இப்படிச் சிதறி வெளியே தெறிக்கும்போது, பயந்த மனிதனும் உண்டு - பழகிய மனிதனும் உண்டு. 194

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/204&oldid=863555" இலிருந்து மீள்விக்கப்பட்டது