பக்கம்:தமிழஞ்சலி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி மாதவியைப் பிரிந்து, அவன் மனமுடைந்து நிற்கும் போது, அந்த மாதவிக் கொடியைப் பார்த்து, "நீயும் மாதவியைப் போல இருக்கிறாயே என்று மனமுருகினா త్ప్రFFiు! சாதாரண மாதவிக்கொடி, தனது நிறத்தால், சாகாவரம் பெற்ற தமிழ் இலக்கியமாகி, உலக இலக்கியமாக உருவடைந்தது. மாதவிக் கொடியின் இலையைப் போல மக்கள் மன்றத்திலே பச்சை நிறமாகி விட்டார் பேரறிஞர் அண்ணா. மக்கள் மனதை, நல்ல பச்சை நிறமாக்கிட வளத்தை ஊட்டுகிறார் - தனது அறிவுத்திறனால். அந்த மலரின் பசுமையான புறவிதழ்கள் ஐந்தைப் போல, அவரது புறத் தோற்றப் பண்புகள் காணப்படு கின்றன. அதன் அகவிதழ்கள் ஐந்தை ஒப்ப அவரது ஐம்புலன்கள் பணியாற்றுகின்றன. அவற்றுள் ஓரிதழ் மட்டும் மஞ்சள் நிறம்! இயற்கையின் படைப்பே படைப்பு:அழகைப் படைக்க இயற்கை கலைஞனுக்கு ஈடு எவருளா தம்பி. அதனாலன்றோ அம்மலர் கண்கவர் வனப்பு பெறு கிறது: மஞ்சள் நிற இதழைப் போல - அவர் சமுதாய சீர் திருத்தங்களைச் செய்து வருகிறார்! 44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/54&oldid=863610" இலிருந்து மீள்விக்கப்பட்டது