பக்கம்:தமிழஞ்சலி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி மலர் தாயே! கலைஞர்களது கற்பனைத் திறனால் யானைத் தந்தத்தில் பொற் சிற்பமானவளே! உன்னை மூன்றாம் பிறையிலே நான் காண்கிறேன். முழு நிலவில் - உன்னிடத்தில் களங்கம் இருப்பதாக என் உபதேசம் இயம்புகிறது. எனவே, பிறையில் உன் இளஞ் சிரிப்பைக் காண்கின்றேன். அன்னாய், என்னை மலராகப் படைக்கும்போது, எதைக் கொண்டு செய்தாய்? தோட்டத்திற்குள்ளே எங்கே நீ என்னை ஒளித்து வைத்திருந்தாய்? பூமியிலே போட்டு புழுதியிலே மூடினாயல்லவா என்னை? எனக்கு அப்போது நீ கொடுத்த ஆகாரம்தான் என்ன? தூறல் ஒரு நாள் தூறிற்று! நிலத்தின் பிடிப்பிலிருந்து கொஞ்சம் நழுவினேன்! நான் முளைத்து விட்டேன்! செடியாகி, நீண்ட காலமிருந்தேன். வைகறை கிழக்கில் முகிழ்த்தது! இலைக்கு நடுவில் நான் சிறு துளியாக இருந்தேன்! 69

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/79&oldid=863651" இலிருந்து மீள்விக்கப்பட்டது