பக்கம்:தமிழரின் மறுமலர்ச்சி, அண்ணாதுரை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழரின் மறுமலர்ச்சி 23 அவனது நாட்டில் அவன் மொழியில் பாட்டு இல்லை. ஜெர்மன் நாட்டிலே ஜெர்மன் மொழியில் பாடல்கள் உண்டு நீக்ரோ நாட்டிலே நீக்ரோவின் மொழியில் பாட்டு உண்டு! வங்காள நாட்டிலே, வங்க மொழியிலே பாட்டு உண்டு 2 தமிழ் நாட்டிலே. தமிழ் மொழியிலே போதுமான அளவு கச்சேரி களை கட்டத் தகுந்த பாட்டு இல்லை; 'இது ஏன்? மித்திரன் கூறுமா? என்று கேட்கிறோம். தமிழர் நாடோடிக் கூட்டமா? இல்லை: பழங்குடி மக்கள்! இந்த நாட்டுக்குச் சொந்தக்காரர்கள்! தமிழர் அறிவுத் துறையிலே பழக்கமற்றவர்களா? இல்லை. பலப்பல இனத்தார் பக்குவமடையா முன்னம் அறிவுத்துறையில் மேலோங்கி விளங்கியவர்கள்; தமிழர் இசை அறியாதவரா? இல்லை. அவர்களின் மொழியே இயல், இசை, நாடகம் என்ற மூன்று முத்துக்கள் கொண்டது. பின்னர் ஏனைய்யா, தமிழ்நாட்டிலே போதுமான தமிழ்ப் பாட்டுக்கள் இல்லையென்கிறீர்கள் என்று. மித்திரனையும் மற்றையோரையும் கேட்கிறோம்! மித்திரன் ஆத்திரம் குருடன் காணமாட்டான்; செவிடன் கேட்க இயலாது; முடவன் ஓடமாட்டான்; அதுபோல், தன்மானத்தைப் பறி கொடுத்த இனம், தன் கலை, தன் மொழி, தன் நிலை குலைந்து தவிக்கும் அத்தகைய நிலை தமிழனுக்கு ஏற்பட்டதால்தான், தமிழிலே பாட்டு இல்லை என்று கூறும் கேவலமான, கொடிய, இழிவான நிலையிலே இருக்க வேண்டி வந்தது. மித்திரன் கூறியுள்ளதை மனசில் பதிய வைத்துக் கொள்ள வேண்டுகிறோம்.