பக்கம்:தமிழரின் மறுமலர்ச்சி, அண்ணாதுரை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழரின் மறுமலர்ச்சி 37 தினைப்புனத்திலிருந்து ஓர் தீஞ்சுவை மொழியாள் தத்தை எனப்படுவாள், இசை மொழிவாள். அந்த இசை கேட்ட பறவைகள் இசைக்கு வயமாகி மயங்குமாம்! மலையோரத்தில், குறிஞ்சி பாடக் கேட்ட மழகளிறு உறங்குமாம்! இனிய இசையில் மயங்கி "அசுணமா" எனும் இசையறி பறவை, எதிரில் தன்னை மறந்து நின்று, பிடிபடுமாம்; ஆனினங்கள் அடங்குமாம்; மதங் கொண்ட யானையும் இசைக்கு அடங்கும் என்று கலித்தொகை கூறுகிறது. அதுமட்டுமா? 14 "அறலை கள்வர் படைவிட அருளின் மாறுதலை பெயர்க்கும் மருவின் பாலை." அதாவது, கள்வரும் இசைகேட்டு, கொடுந்தொழில் மறந்து நின்றனராம். தோற் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவிகள் என் இசைக் கருவிகள் எண்ணற்றன இருந்தன. தோற் கருவிகளில் மட்டும் பேரிகை, படகம், இளக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, காடிகை முதலிய முப்பதுக்கு மேற்பட்டு இருந்தன. இசைக் கருவிகளுக்கு இயம் என்றோர் பெயருண்டு. பலவகை இசைக் கருவிகளையும் வாசிக்கத் தெரிந்த காரணம் பற்றி, ஒரு புலவருக்கு நெடும் பல்லியத்தனார் என்ற பெயரும் இருந்தது. பாடுவோர் பாணர் என்ற தனிக் கூட்டமாகவும் இருந்து, தமது முதுகுகளில் வகைவகையான இசைக் கருவிகளை ஏற்றிக் கொண்டும், பல நாடு சென்று பாடி மகிழ்வித்துப் பரிசு பெற்று வாழ்ந்தனர். மங்கின; அழிந்தன! இன்னின்ன காலத்துக்கு இன்னின்ன இசை பாடுதல் பொருத்தமென்றிருந்தது. பாடி வந்தனர். காலையில் மருதப் பண்ணும் மாலையில் செவ்வழிப் பண்ணும் பாடுவராம்.