பக்கம்:தமிழரின் மறுமலர்ச்சி, அண்ணாதுரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 சி.என். அண்ணாதுரை தராது. கட்டுப்பாடும், உறுதியும், உணர்ச்சியும் கொண்டதாக ஒரு பெருங்கூட்டம் இருப்பின், அதனை ஒரு சிறு கூட்டம் எதிர்த்துப் பயன் இல்லை என்பதே கவியின் கருத்து. எண்ணிக்கையைவிட இங்கு இயல்பே முக்கியமாகக் கவனிக்கப்படுதல் வேண்டும். ஒருமைப்பாடு தமிழ் இசை இயக்கத்தைப் பெருங்கூட்டம் ஆதரிக்கிறது. சிறிய கும்பலொன்று எதிர்க்கிறது. எதிர்க்கிறது என்றுரைப்பதைவிட எதிர்த்தது என்றுரைத்தால் பொருந்தும் என எண்ணுகிறோம். பல்வேறு கட்சிப் பற்றுடையவர்களும், தமிழினால் ஒன்றாக்கப்பட்டு, ஒருமனமாகி, ஒத்தகருத்தை வெளியிட்டதைக் கேட்டபிறகும், தமிழ் இசை இயக்கத்துக்கு இவ்வளவு ஆதரவு இருப்பினும், நாங்கள் எதிர்த்தே தீருவோம் என்று கூறும் அளவுக்கு அந்தச் சிறுகும்பல் அறிவை இழந்துவிட்டிருக்கும் என்று நாம் நம்புகிறோம். அவர்கள் நிச்சயமாக உணர்ந்திருப்பார்கள். தமிழ் இசையைத் தமிழர் ஆதரிக்கின்றனர் என்பதை. எனவே, எதிர்த்துப் பயனில்லை என்று தீர்மானித்து விட்டிருப்பர். தமிழ்ப் பாடல்களைச் சில்லறை உருப்படிகள் என்று கூறுகிறார்களே, அந்தக் கெட்ட வழக்கத்தை விட்டுவிட வேண்டும்' என்று தோழர் தியாகராஜ பாகவதர் கூறின போதும், திருவாவடுதுறை ராஜரத்தினம் அவர்கள் 'தமிழ்ப் பாடல்கள் பாடப்படாத கச்சேரிகளுக்குப் போகாதீர்கள்; தமிழ்ப் பாடல்களைப் பாடாத வித்வான்களை அழையாதீர்கள்' என்று கூறியபோதும், 'என் கீர்த்திக்குக் காரணமே தமிழ்தான்' என்று தோழர் தண்டபாணி தேசிகர் அகங்குளிரக் கூறியபோதும், 'எந்தக் கூட்டத்தார், எந்த வகுப்பார், எந்தப் பத்திரிக்கைக்காரர் எதிர்த்த