பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடைபற்றிய சொற்கள்-ஓர் ஆய்வு முன்னுரை "நிலத்தினும் பெரிதே வானினும் உயர்த்தன்று நீரினும் ஆரளவின்றே' 3 என்று நட்புக்கு இலக்கணம் வகுத்தாள் குறுந்தொகைப் புலவன், ஆய்வுக்கும் இது பொருந்தும். ஆய்வின் ஆழமும் அகலமும் வரையறைக்குட்படாதது. கற்றது கைம்மண்ணளவே ஆய்வின் நிலையுமாகும். அறிவியல் ஆய்வு, இலக்கிய ஆய்வு, மொழிநூல் ஆய்வு போன்ற பல்வகை ஆய்வுகளுள் சொற்பொருள் பற்றிய ஆய்வும் ஒன்று, இதனை 1. பல்துறைச் சொற்கள் பற்றிய ஆய்வு 2. ஒருதுறைச் சொற்கள் பற்றிய ஆய்வு 3. ஒருசொல் பற்றிய ஆய்வு' என்ற முந்திங்ைகளில் தோக்கலாம். இவற்றும் ஓவ்வொரு சொல்லும்1. சொல்லின் தோற்றம் 2. பொருள் 3. காலத் தோறும் ஏற்ற உருமாற்றம் 4. பொருள் மாற்றம் என்ற நான்கு கூறுகளையும் கொண்டிவங்குதல் லேண்டும். மொழிப் பொருட் காரணம் விழிப்பத் தோன்றா எனினும் எல்லாச் சொல்லும் போருள் குறித்தனவே' என்பது அறிஞர் கட்டிய உண்மை, மனித எண்ணங்கள் சொற்களில் பாதுகாக்கப் படுகின்றன என்ற கருத்தினையும் காண்கின்றோம்.: 1. "The beautiful thoughts and imxges, the imagination and focling of past ages are preserved in words"==;ays Trench. Words and Their Significance-Dr. R. P. Sethupilisi, Page 1. 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/32&oldid=1498828" இலிருந்து மீள்விக்கப்பட்டது