பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

60 தமிழர் ஆடைகள் போர்வை எனும் பொருளில் பயன்படுத்தியது 'படாம்' எனினும் பின்னர் 'போர்வையே பெரும்செல்வாக்குப் பெறுகின்றது. இன்றும் இந்நிலையே நீடிக்கின்றது. படர்ந்து இருத்தல் காரணமாகப் பெயர் பெற்றது படாம். உடாத போராஅ என்பதறித்தும் படாத்தினை மஞ்ஞைக்கு ஈயும் தன்மையில், சங்கப் புலவர் படாம் பற்றிய எண்ணத்தினை நல்குகின்றார். பின்னைய இலக்கியங்கள் போர்த்தல் என்ற பொருளில் இதனைச் சுட்டினாலும், யானையின் முகபடாம் (குறள் -1087, சீவக. 182) விரிப்பு (பெருங். 1.47:179) என்பன வற்றைச் கட்டப் பயன்படுத்துகின்றனரே தவிர, மக்கள் போர்த்தியமையைக் குறிக்கப் பயன்படுத்தவில்லை. படாம் என்ற சொல், பாவாடை என்று வழங்கிய நிலையும் பரலிய ஆடை என்ற இதன் பொருளையுணர்த்த வல்லது. விலை வரம்பறிதலில்லாத வெண்டுகில் அடுத்து என சிந்தாமணி (617) படாம் விரித்தமையைப் பேசும். பெரிய புராணத்தில் பாவாடை என்றே இது சுட்டப்படுகின்றது. பரந்த பாவாடைமீது முன்னிழிந்து அருளி வந்தார் (நிருஞான. 1226). கலிங்கத்துப் பரணியிலும் பாவாடை பற்றிய எண்ணத்தைக் காண்கின்றோம் (561). இன்னும் யானையின் முகபடாத்தில் இச்சொல் வழக்கு மிகுதியாக அமைய, கரும்படாம், கரும்படம் எனப் போர்வையைக் குறிக்கும் மரபும் ஒருசிடி இடங்களில் தென்படு இன்றது (கன்னியாகுமரி மாவட்டம்). பாவாடை நடைப் படாத் துடன் பெண்டிர் இடையாடையினையும் குறிக்கின்ற நிலை கண் கூடு. மயிரினால் கருவாக்கப்பட்ட ஆடைகள் அனைத்தையும் 'கம்பளா' என, பௌத்த இலக்கியங்கள் சுட்ட", தமிழர் 47. For woolen clothes of all varieties the term Kambala is used in Buddhist litera ure. - Costume Textiles Cosmetics & Coiffure - Dr. Moti = chandra, page-24.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/73&oldid=1498654" இலிருந்து மீள்விக்கப்பட்டது