பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 'வில்லவl வடநாட்டு வேந்தர்களை வெஞ்சிறையினின் றும் விடுதலே செய்க விடுதலை செய்து, விழா முடிந்த, பின்னர் உம் நாட்டையும் உரிமை பெறுவீராக என உரைத்து அவர்க்கும், கம் வஞ்சிமாநகரின் புறநகரத் துப் பூஞ்சோலைக்கிடையே அமைந்து கிடக்கும் வேள் ஆவிக்கோ மாளிகையில் இருக்கை அளித்தும், வேண்டுவ கொடுத்தும் பேணிப்புரப்பாயாக!' என்று. பணித்தான் எனில், வில்லவன் கோதை, பகைவர் உள். ளத்தில் பகைமை யுணர்வு உருவிழந்து போன கிலேயில், அவரை உயிர் நண்பராகக் கொள்ளும் உயர் பேருள்ளம் கொண்ட உரவோன் என்பதில் ஐயம் உண்டோ? " ஆரிய அரசரை அருஞ்சிறை நீக்கிப் பேரிசை வஞ்சிமூதூர்ப் புறத்துத் தாழ்நீர் வேலித் தண்மலர்ப் பூம்பொழில் வேளாவிக்கோ மாளிகை காட்டி கன்பெரு வேள்வி முடித்தன் பின்னுள் தம்பெரு நெடுநகர்ச் சார்வதும் சொல்லி அம். மன்னவர்க்கு ஏற்பன செய்க நீ என வில்லவன் கோதையை விருப்புடன் ஏவி'