பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181 உணர்ந்து விருந்தினர் வேண்டியவாறே, தம் ஆருயிர் அனைய அம்மகனே அறுத்து அறுசுவை உணவாக்கி அளித்து விருந்தோம்பிய செயற்கரும் செயல் செய்த சீலம் உடைமையால், வாளான் மகவு அரிந்து ஊட்ட வல்லேனல்லன்” எனப் பிறிதொரு பேரடியாரால் பெரிதும் பாராட்டத்தக்க பேராப் பெருநிலை பெற்ருர் எனப், பெரிய புராணம் பாடிய சேக்கிழரால் சிறுத் தொண்டன் எனப் பெயரிட்டு அழைக்கப் பெறும் அப் பரஞ்சோதியார், பல்லவர் படைத் தளபதியாய் பணி யேற்று ஆற்றிய போர்த்திறம், அம்மம்ம! அளப்பரும் பெருமைத்து அல்லவோ! தமிழகத்தின் வடவெல்லேயாம் வேங்கடத்தைத் தன்பாற் கொண்டது, உலக கிலேபேற்றினுக்கு ஊன்று கோலாவர் எனப்படும் சான்ருேர்களே உடையது என் பனபோலும் எண்ணிலாச் சிறப்புகளைக் கொண்ட தொண்டை நாட்டை, இளங்திரையன் இருந்து ஆண்ட சங்ககாலத்திற்குப் பிறகு உரிமை கொண்டு ஆண்டு வங்தவர், பல்லவர் எனும் அரச மரபினராவர். அப் பல்லவப் பேரரசின் பெயரை உலகம் உள்ளளவும் நின்று நிலைக்கச் செய்யும் கற்கோயில்கள் காட்சி தரும் கடற்கரை நகருக்க, மாமல்லபுரம் எனத் தன் பட்டப் பெயர்களுள் ஒன்றைச் சூட்டு முகத்தான், தானும் இறவாப் பெருகலே பெற்ற பெரியான், மாமன்னன் மகேந்திரனின் மகளும் நரசிம்மவர்மனவன். மாமல்ல புரம் கண்டு மங்காப் புகழ் கொண்ட அவன், வாதாபி வென்றவன் என்ற வான்புகழ் கொள்ளப் பெருந்துணை புரிந்தவர் பரஞ்சோதி ஆவர். - காஞ்சியை தலைநகராகக் கொண்ட தொண்டை காட்டைப் பல்லவர் ஆண்டிருந்த காலத்தில், வேங்க டத்திற்கு அப்பால், துங்கபத்திரை ஆற்றினுக்கு வடக்கில் உள்ள பெருகிலப் பரப்பை, வர்தாபியைத் தலைநகராகக் கொண்டு சாளுக்கியர் என்பார் அரசாண்