பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 மடிகின்றன; குடிமக்கள் காவல் மிக்க இடம் தேடி. ஒடி அலேகின்றனர்; கருணுகரன் உடன் வந்திருக்கும் சோழர் படை கடல்போல் மேலும் மேலும் கலிங்கத் துள் புகுகின்றது. கடல் பொங்கி எழுந்தக்கால் புகல் இடம் காணல் இயலுமோ? கடல்போலும், கருணு கரன் பெரும்படை பொங்கி எழுந்தால், கலிங்க காட்ட வர்க்கும் புகலிடம் எங்கே காண்பது? என்னே நம் அறியாமை?’ என உரை குழற முறையிட்டனர். குடிமக்கள் முறையீட்டைக் கேட்டும், அவர் தம் அவல நிலையைக் கண்டும் அனந்தவன்மன், பணிந்து திறை தரும் அறிவு வரப் பெற்ருனல்லன். 'கான் அரனும், மலே அரணும் அமைந்தது கலிங்ககாடு; அதல்ை அழிக்கலாகா ஆற்றல் வாய்ந்தது என்பதை அறிந்து கொள்ளமாட்டாமையால் அழிவுதேடிப் புகுந்துளது சோழர் படை ஆகவே அதன் வரவு கண்டு அஞ்சுவது ஒழிக!” - அவர்க்கு ஆறுதல் உரைத்துவிட்டு, அமைச்சர் குழாத்தை நோக்கி, 'சோழர் குலப் பேரரசன் குலோத்துங்கனேயே பணிய மறுக்கும் யான், அவன் படைத்தலைவனுக்குப் பணிந்து விடுவனே? அத்துணை எளியனே இவ்வனங். தவன்மன்?’ எனச் சோழர் படைத் தளபதியாம் கருணுகரனே இகழ்ந்து கூறி எள்ளி நகையாடினன். படையாலும் பரப்பாலும் சிறந்து விளங்கும் சோழர் பேரரசின் பெருமையினையும், உள்ளங்கை அளவு உருவு உடையதான கலிங்கத்தின் சிறுமையை யும், சோழர் படைக்குத் தலைமை யேற்று வந்திருக்கும் தமிழர் பெரும் தளபதியாம் வண்டையர்கோ கருணு கரத் தொண்டைமானின் தோள் வன்மையினையும் அறிந்து கொள்ளும் அறிவின்றி அரசன் உரைத்தது கேட்ட அமைச்சர் தலைவர் எங்கராயர், அனந்தவன் மனுக்கு அறிவுரை கூறுவான் எழுந்து, "வேங்தே! கலிங்கம் புகுந்து பாடிகொண்டிருக்கும் குலோத்துங்