பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 கால்வகைப் படைவீரரும் கண்ணுக போர்க்களம்!” என ஆணையிட்டு அமர் மேற்கொண்டான். கலிங்கப் படை களம்கோக்கிப் புறப்பட்டு விட்டது என்பதை அறிந்து கொண்டதும், கருணு. கரன், அப்படையை விரைந்து சென்று வீழ்த்துமாறு தன் படைக்கு ஆணே பிறப்பித்தான். அவ்வளவே,. இரு பெரும் கடல்கள் எதிர் எதிர் நின்று போரிட்டாற் போல், இரு திறப் படைகளும் ஒன்றை யொன்று தாக்கிக் கடும் போர் புரிந்தன. “படைக் கலங்களே எடுங்கள்; பரிகளைப் பாய விடுங்கள், களிறுகளைக் களம் நோக்கிப் போக விடுங்கள்’ என்பன போலும் ஒலிகள், கடல் ஒலி போல் ஓவென ஒலித்தன. வில் நாணே விரைந்து இழுத்து விடுங்தோறும் எழும் ஒலியும், வீரர்களின் ஆரவாரப் பேரொலியும் காது. களைச் செவிடாக்கின; காலேப் போது கடந்து மாலைப் போது நெருங்க நெருங்க, கலிங்க வீரர்களிடையே சோர்வு தலே தூக்கிற்று. அங்கிலேயில் கருணுகரனும் கலம் ஏங்திக் களம் புகவே கலிங்கப் படை அறவே அழிவுற்றுப் போக, எஞ்சிய சிலரும் பிழைத்தோடத். தலேப்பட்டனர். உயிர் பிழைத்தால் போதும் எனும் உணர் வுடையராகிப் புதரினிடையே புகுந்து புகுந்து ஓடிய போது, அப்புதரிடைச் சிக்குண்டு அரை ஆடை கிழிந்துபோகத், தலைமயிர் பறிப்புண்டு போக மழுங்கிய தலையினராய் வெளிப்பட்டு, அமணர் யாம்; அடித்து அலேக்காதீர் எம்மை’ எனக் கூறிப் பிழைத். தோடிப் போனர்கள் சில கலிங்கர். ஒடிந்து விழுங்து உருக்குலேங்து போன வில்லின் நாணே, மார்பில் முந்நூல் போல் அணிந்து கொண்டு, 'அந்தணர் யாம்: கங்கை ஆடப் போங்து இவண் அகப்பட்டுக் கொண்டேம்” என உரைத்து உயிர் பிழைத்தார் ஒரு. சிலர். குருதிக் கறையேற்றுக் காவி நிறம் பெற்ற