பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்ற புலவர், ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன என்பானைப் பாராட்டும்போது,உண் பொருள் பெறாது உறுபசி வருத்தும் பெரிய சுற்றம் புடைசூழ, பொருள்தரும்.வள்ளலைத் தேடிவரும் முதியோனே! பாணர் பசி போக்கிப் பாண்பசிப் பகைஞன்' எனும் பெயர் பெற்றோனொருவன் ஈர்ந்தை யெனும் ஊரின்கண் உள்ளான்.உம் வறுமைதீர வேண்டின் எம்மோடு வருக. யாம் இப்போது அவன் பாலே செல்கின்றேம். வருவார்தம் பசி போக்கும் வள்ளற் பெருந்தகையாகிய அவன்பால், சென்ற வுடனே வழங்கவல்ல பொருள் வளம் இல்லை. நாம் சென்று அவனை இரந்து நின்றால்,அவன் நம்மையெல் லாம் கூட்டிச் சென்று, தன்னூர்க் கொல்லன் முன் நிறுத்தி,வறுமையால் வாடிக்கிடக்கும் நம் வயிற்றைக் காட்டி, இவர் வறுமை தீர்க்கும் வளத்தினைப் பெற வேண்டும்.அது பெறயான போர் மேற் செல்லுதல் வேண்டும்.ஆகவே,போருக்காம் படைக்கலங்களை விரைந்து ஆக்கி அளிக்குமாறு உன்னை யான் இரக்கின்றேன் என்று வேண்டிக்கொள்வன் என்று கூறி, அக்காலப் படைமறவர்கள் இது போலும் பயன்மிகு செயல் குறித்தே படைதொடும் பண்புடையவராவர் என்ற உண்மையை உணர்த்தியுள்ளார்.

"ஈர்ந்தையோனே பாண்பசிப் பகைஞன்;
இன்மைதீர வேண்டின், எம்மொடு
நீயும் வம்மோ முதுவாய் இரவல!
யாம்தன் இரக்கும் காலைத் தான்எம்
உண்ணா மருங்குதல் காட்டித் தான்ஊர்க்
கருங்கைக் கொல்லனை இரக்கும்
திருந்திலை நெடுவேல் வடித்திசின் எனவே".

இவ்வாறு பற்பல நற்பயன் குறித்து ஓயாது போர் மேற்கொள்ளவேண்டிய இன்றியமையாமை பண்டு நிலவியதால் அக்காலப் படை மறவர்கள்,