பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பழந்தமிழ்... ஆசிரியர்கள்

17


விளக்கமாகும். இருக்குவேத சமிதாவின் மூன்றாவது மண்டலம், தம் பெயர் இடம் பெறும் விஸ்வாமித்திர முனிவர்க்குப் பிறந்த மக்களாவர் தஸ்யூக்கள், எனக்குறிப்பிடுகிறது. “அய்த்திரேய பிராமணர்”. சில வரலாற்று ஆசிரியர்கள் சார்த்த விரும்புவதுபோல் தஸ்யூக்கள், திராவிடர்களாகக் கருதப்பட்டால், விசுவாமித்திர முனிவர் தாமும், திராவிடர் ஆதல் வேண்டும். ஆனால், தஸ்யூக்கள், ஆரியர் அல்லர் என்பது முடிந்த முடிவு. ஆரியப் படையெடுப்பு எனக்கூறப்படும் ஒன்று நடைபெற்ற காலத்தில், தஸ்யூ திராவிடர்கள், பஞ்சாபிலும், கங்கைச் சமவெளியிலும் வாழ்ந்தனர்; அவ்வாரியர்களால் வெற்றி கொள்ளப்பட்டனர்; தெற்கு நோக்கி ஓடினர்; அத்தென்னாட்டையே, தங்கள் தாயகமாகக் கொண்டு விட்டனர் என்ற கருத்துநிலைத்து நிற்காது. இந்தியா முழுதும், ஒரு காலத்தில் காட்டுப் பகுதியாகவே இருந்தது; அது முதலில் படையெடுத்து வந்த திராவிடர்களால் முதன்முதலிலும், அடுத்துப் படையெடுத்துவந்த ஆரியர்களால் அடுத்தும் நாகரீகம் உடையதாக ஆக்கப்பட்டது எனக்கூறுவது, மரபு நெறிக்கு ஏற்புடையதாகாது. இக்கருத்து தொல்பொருள் ஆய்வு அளிக்கும். விலைமதிக்க வொண்ணா வரலாற்று உண்மைகளைப் புறக்கணிப்புதாகிவிடும். தென் இந்தியாவில் நிலம் தோன்றிய காலம்முதல் (Paleolithic), புதிய கற்காலம் வரையும் (Neolithic), புதிய கற்காலம் முதல் பெருங்கற்காலம் வரையும் (Neoalithic), பெருங்கற்காலம் முதல் இரும்புக் காலம் வரையும் (Iron Age) நாகரீகத்தின் இடையற்றுப் போகாத் தொடர்ச்சி (குறிப்பு: 19 காண்க) நமக்கு இருந்து வந்துளது. மண்ணுக்கே உரிய தொல்பழங் காலத்ததாய இந்நாகரீகம், படையெடுத்து வந்த திராவிடர்களால் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருக்க இயலாது. முடிவு காணமாட்டா இச்சிக்கலில் இருந்து தப்பித்துக்கொள்ளத் திராவிடர்களின்