பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104 தமிழர் நாட்டுப் பாடல்கள்

பூரிலத்து லிங்கத்தை நீ பூசை செய்ய வந்தவனோ! மான் கண்டேன் உன்னைப் போல் ஒரு மயில் கண்டேன் கானலிலே தேன் கண்டேன் கூட்டிலே உன்னைப் போல் ஒரு சிலை கண்டேன் கோயிலே தொந்தி குலுங்க துடை குலுங்க வேட்டி கட்டி அந்தி நடை நடந்து உங்களப்பா அதிகாரி வந்திறங்கி கோட்டுத் துறந்து

குறிஞ்சிமேல் உட்கார்ந்து 

கேசை விசாரிக்கும் கவர்னரோ உங்களப்பா அரைக்குகந்த துயிலுடுத்தி அரண்மனைக்குப் போகையிலே துரைக் கிசைந்த வார்த்தை சொல்லும் உங்களப்பா ஜோதிக்கிளி வாயாலே. வேட்டி நயமோ உங்களப்பாவுக்கு வெளுக்க வண்ணான் கை மெதமோ, சல்லா மெதமோ உங்களப்பா சாமி கெட்டும் துப்புரவோ

சீராட்டு நோம்பு 

சிவ நோம்பு நாளையிலே உனக்குத் தாலாட்ட வாராக மதுரைத் தாசிமார் எல்லோரும்

வட்டார வழக்கு: பூரியத்து- பூர்வீகமான.

  சேகரித்தவர்: 

குமாரி P. சொரணம் சிவகிரி

இடம்:

சிவகிரி

          தாலாட்டு
        ஆசாரி, வாரும்
குழந்தைக்கு இப்பொழுது தொட்டில் வேண்டும். நல்ல

தொட்டிலாக ஆக்கமுள்ள தொட்டிலாகச் செய்ய வல்லவர்