பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106. தமிழர் நாட்டுப் பாடல்கள்

குருத் தோலை பெட்டி செய்து சீனி போட்டுத் திங்க-நீ செல்லமாய்ப் பிறந்தவனோ! பட்டெடுத்தாலும் தொட்டி கெட்ட பசும் பொன்னெடுத்து பொட்டுரைக்க ஆட்டுங்க தாதியரே என் அன்னக்கிளி கண்ணயர வாருமய்யா வளையல் செட்டி, வந்திறங்கும் பந்தலிலே கோல வளையல் தொடும் குணத்துக்கொரு வளையல் தொடும்

நீல வளையல் தொடும் 

நான் பெத்தானுக்கு நிறத்துக்கொரு பச்சை தொடும் வளையல் தொட்ட செட்டி வயிறு எரிந்து போகாம அள்ளிப்பணம் கொடுத்து அனுப்பி வைத்தார் உங்களப்பா கல்லெடுத்து கனி சொறிஞ்சு கம்சனையே மார் வகுத்து ரூபம் செய்யும் மாயன் பெருமாளோ! பச்சை முடிமன்னரோ பவழமுடி இராவணரோ அச்ச மெல்லாம் தீர்க்க வந்த ஆதி நாராயணரோ பால் குடிக்கக் கிண்ணி, பழம் திங்க சேனோடு நெய் குடிக்கக் கிண்ணி, நிலம் பார்க்கக் கண்ணாடி கொண்டைக்குக் குப்பி கொண்டு வந்தார் தாய்மாமன் கல்லெடுத்துக் கனி யெறிந்து உங்க மாமா காளி யோட வாதாடி, வில்லெடுத்து படை திரட்டும் நீ வீமன் மருமகனோ! தவளை குலவையிட கோந்த மூர்த்தி தாமரையும் பூமலர தவளைச் சத்தம் கேட்டு இராமர்