பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாங்கி வந்தார் தாய்மாமன்! எண்ணெய்க் கிணறுகளாம், எதிரே கொடிமரமாம் தண்ணீர்க் கிணறுகளாம் தட்டான் குளத்தா தங்கி இருக்கும் மண்டபமாம் மண்டபத்துக் குள்ளிருந்து தட்டான் குளத்தா மடிக் குழந்தை தந்தாளாம் தங்க விளக்கெரிய உங்க தாத்தா வாசலிலே விடி லாந்தல் நின்னெறிய வீம ராஜா வாசலிலே நீ விளையாட வந்த கண்ணோ! மட்டம் சிறு குழந்தை உங்கள் மாமனார் தேசமெங்கள் அன்னா தெரியுதில்லா உங்க மாமன்மார் அன்னக் களஞ்சியங்கள் முட்டாயிப் பெட்டி கொண்டு முதல் தரத்துச் சீனி கொண்டு பன்னிருச் செம்பு பார்க்க வாராக உங்களம்மான் வட்டார வழக்கு: மங்களா-பங்களா தொட்டில்_தொட்டி, கெட்ட-கட்ட, மார்-மார்பு; தட்டான் குளத்தாநாட்டார் தெய்வம். குறிப்பு: தட்டான்குளத்தா-இது தாயின் பரம்பரை ஊர். அம்மனாகவோ, அல்லது குலதெய்வமாகவோ இருக்கும். ஒரு ஊரில் வசிப்பவர்கள் தூரத்து ஊர்களில் குலதெய்வம் இருப்பதுண்டு. சேகரித்தவர். இடம்: P. சொரணம் நெல்லை மாவட்டம் தாலாட்டு கோயிலுக்கு என்ன செய்வோம்? குழந்தை தாய் தந்தையர் மனம் குளிர வளர்ந்து வருகிறான். அவர்கள் மகிழ்ச்சி தாங்காமல் இவ்வரத்தைத் தனக்களித்தற்காக,