பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை


யாரடித்தார்‌ நீ யழுக

அடித்தாரைச்‌ சொல்லியழு

சீரடிக்கும்‌ கையாலே என்‌

சிகாமணியே நித்திரைபோ,

அம்மா அடித்தாளோ, கண்ணே

அமுதூட்டும்‌ கையாலே

அக்கா அடித்தாளோ கண்ணே.

அள்ளி எடுக்கும்‌ கையாலே

பாட்டி அடித்தாளோ கண்ணே

பால்‌ வார்க்கும்‌ கையாலே

மாமா அடித்தானோ கண்ணே

மல்லிகைப்பூச்‌ செண்டாலே.

மாமி அடித்தானோ கண்ணே உனக்கு

மைதீட்டும்‌ கையாலே.

தங்க மிதியடிய்ம்‌ கண்ணே அது:

தாலுகா கச்சேரியாம்‌

தாலுகா கச்சேரியில்‌ உன்‌ மாமன்‌

தந்தி பேசும் மந்திரியோ!

செட்டிமார்‌ தெருவிலே என்‌ கண்ணே

செண்டு விளையாடப்‌ போகையிலே

செட்டிமார்‌ பெண்டுக உன்‌

செண்ட விலைமதிப்பார்‌

பாப்பார்‌ தெருவிலே

பந்து விளையாடயிலே என்‌ கண்ணே

பாப்பார பெண்டுக உன்

பந்தை விலைமதிப்பார்‌.


சேகரித்தவர் : குமாரி டி.சொர்ணம்


இடம்‌:

சிவகிரி


தாலாட்டு

(உங்கள்‌ அப்பா)

இத்‌ தாலாட்டில்‌ தாய்‌, “தன்‌ கணவன்‌ பெருமையையும்‌, மாமனார்‌ பெருமையையும்‌ பற்றி குழந்தைக்கு எடுத்துரைக்கிறாள்‌.


சிவகிரி ஜமீனில்‌ கணக்கராக வேலை செய்யும் அவளுடைய கணவரை அவள்,