பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாலாட்டு 117 அய்க்கோடு வேலைக்கு அநேகம் பேர் வந்தாக காஞ்சி வனத் தண்ணே, கண்ணே கரிக்குதுண்ணு தெங்காஞ்சி எண்ணெய்க்கே சீட்டெழுதி விட்டாக பால் சங்கு போட்டு, பவளவாய் நோகுதிண்ணு, பொன் சங்கு வாங்க போராக பொன் மருத, மருதக்கட திறந்து மனசுக்கேத்த சங்கெடுத்து, சுத்தி வர சிகப்பு வச்சு, துருக்கோர் பச்சை வச்சு வாயிக்கு வர்ணம் வச்சு வாங்கி வந்தாக ஒங்களய்யா! மருத அழகரோ வாழ் மருதசொக்கரோ, திருமால் அழகரோட சேதிக்கோ வந்தவனோ கல்லிய நெல் விளையும் கானலெல்லாம் பூமணக்கும் புல்லிள நெல் விளையும் புண்ணியனார் போற பாதை குளிக்கக் கிணறு வெட்டி கும்பிட வோர் கோயில் கட்டி படிக்க மடம் கட்டி வைக்க பாண்டியனார் பேரனோ வட்டார வழக்கு: அய்க்கோடு-ஹைக்கோர்ட்; காஞ்சிவனம்-காஞ்சிபுரம், மருத-மதுரை, தென்காஞ்சிதென்காசி, போராக, வந்தாக-போகிறார்கள், வந்தார்கள். குறிப்பு: கிணறு வெட்டுதல், கோயில் கட்டுதல், மடம் கட்டுதல் என்பது தான தருமங்களாகும். சேகரித்தவர்: இடம்: கார்க்கி சிவகிரி.