பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 காதல் 141

போலீசு வேட்டியில போட்டு விட்டேன் மேவிலாசம் கோடாலிக் கொண்டைக்காரா குளத்துருக் காவல்காரா வில்லு முறுவல் காரா நில்லு நானும் கூடவாரேன் துத்தி இலை புடுங்கி துட்டுப் போல் பொட்டுமிட்டு ஆயிலிக் கம் பெடுத்து ஆளெழுப்ப வாரதெப்போ?

வட்டார வழக்கு: வருசநாடு-மதுரையில் மலைச்சரிவில் உள்ள ஒரு ஊர்; கொடுத்திட்டில்ல-கொடுத்துவிட்டு அல்லவா?; மேவிலாசம் -மேல் விலாசம். சேகரித்தவர். இடம்: 8.M. கார்க்கி சிவகிரி, திருநெல்வேலி மாவட்டம்.

        சத்தியம்

ஒரு பாடலில் காதலி தன் காதலனது அன்பையும் உறுதியையும், மீனாட்சி கோவில் தூணிலடித்து சத்தியம் செய்து காட்டச் சொல்லுகிறாள். இங்கு காதலன் துணி போட்டுச் சத்தியம் செய்து தருகிறேன் என்று சொல்லுகிறான். இவன் சத்தியத்தை மீறுவானானால் துணிக்குக் கூட விதியில்லாத தரித்திரனாகி விடுவான் என்பது நம்பிக்கை.

பெண்:சாஞ்ச நடையழகா!

     சைக்கிள் ஒட்டும் சாமி!
     ஒய்யாரச் சேக்குகளாம் 
     ஒலையுதில்ல சைக்கிளிலே 
     வட்டமிடும் பொட்டுகளாம் 
     வாசமிடும் சோப்புகளாம்
     சாமி கிராப்பு களம்
     சாயந்திரம் நான் மடிப்பேன் 
     அரக்கு லேஞ்சிக்காரா
    பறக்க விட்டாய் சண்டாளா!

A519 - 10