பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170 தமிழர் நாட்டுப் பாடல்கள்

சட்டம் பொருந்தவில்லை

முறை மாப்பிள்ளை, முறைப்பெண்ணை சற்று வரம்புமீறியே கேலி பேசிக்கொள்ள உரிமை இருந்து வந்தது. இதற்குக் காரணம் முன்னர் ஒரு குறிப்பில் கூறியுள்ளோம். ஒரு முறை மாப்பிள்ளை வயதில் இளையவன் உருவத்திலும் பெண்ணைப் பார்க்கிலும் சிறியவன். அவன் விளையாட்டாக அவளிடம் காதல் குறிப்புணர்த்தும் பாடல்கள் பாடுகிறான். அவளும் "மீசை முளைக்காதவன் என் உயரத்தை மீறாதவன். என்னைவிடச் சிறுவன் நீ எனக்கு மட்டமா?"

பெண்; சோளக் காட்டு மூளையிலே ஜோடிப் புறா மேயயிலே ஆளக் கண்டா சச்சம் போடும் அழகான மாடப்புறா

ஆண்: கரையிலே கமுக மரம் கம்மாக் குள்ள வேப்பமரம் தலையிலே தண்ணிக் குடம்-நீ தனிச்சு வந்தா லாகாதோ

பெண்: அருப்பம் இறங்கலியே ஆளுக் கொஞ்சம் மீறலியே சட்டம் பொருந்தலையே- நம்ம சரியான மட்டத் தோட

வட்டார வழக்கு: சச்சம்-சப்தம்.

சேகரித்தவர்: S.M. கார்க்கி இடம்: நெல்லை மாவட்டம்.

நான்தானடி உன் புருஷன்

அவன் அவளுக்கு முறை மாப்பிள்ளை. அவளை மணம் செய்து கொள்ள விரும்புகிறான். ஒருமுறை அவளுக்கு ஒரு மோதிரம் பரிசளித்தான். அம்மோதிரம் அவர்கள் உறவை அலராக்கியது. எல்லோரும் கேலி பேசத் தொடங்கினர். புருஷன் என்று சொல்லிவிட்டால் போதுமா? நாலு பேரறிய தாலி கட்ட வேண்டாமா? இப்படி அவள் நினைத்துக்கொண்டே வேலைக்குச் செல்லுகிறாள். அவன் எதிர்ப்படுகிறான். அவள்