பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை 13 னால் அதிகாரிகள் சோழ மூவேந்த வேளான் விதித்த இவ்வரிகளைக் கொடுக்க வேண்டியதில்லை என்று முடிவு கட்டினார்கள். அன்றியும் 18 விஷயங்களிலுமுள்ள (நிலப் பகுதி) வரிவிகிதங்களையும் நிர்ணயித்து நிச்சயித்தார்கள். இக்கல்வெட்டுக்களில் காணப்படும் செய்திகளால் ஒவ்வொரு சமயம், நிலச் சுரண்டல் முறையையும், வரிச்சுமைகளையும், அதிகாரிகளின் கொடுமைக ளையும், இடங்கை வலங்கைப் பிரிவினரில் ஏழை எளிய மக்கள் எதிர்த்து நின்று வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதைக் காட்டுகிறது. ஊரின் வாழ்க்கை முழுவதும், சோழ வம்சம் வீழ்ச்சி யடைந்த காலம்வரை கோயில்களைச் சார்ந்தும், உழவுத் தொழிலைச் சார்ந்தும், சிறுதொழில்களைச் சார்ந்துமே இருந்தன. கோயில் நிர்வாகத்திலிருந்தவர்கள், ஊரிலுள்ள எல்லாப் பகுதி மக்களின் வாழ்க்கையையும், கட்டுப்படுத்தும் வல்லமை பெற்றி ருந்தார்கள். இவ்வல்லமைக்குக் காரணம் கோயில் நிலங்களின் மீது அவர்களுக்கிருந்த ஆதிக்கமே. நிலவுடைமைக்காரர்களைத் தவிர மற்றவர்கள் கோவிலுக்கு சொந்தமான மான்ய நிலங்களைப் பயிரிட்டே வாழ்க்கை நடத்தினர். சிற்சில சமயங்களில் இம்மான்ய நிலங்களை அதிகாரிகளின் உதவியோடு பெரிய நிலச் சொந்தக்காரர்கள் கைப்பற்றிக் கொள்ள முயன்றனர். நிலத்தை இழந்தவர்கள் தங்களுடைய எதிர்ப்பை உயிர்த் தியாகம் செய்து காட்டிக் கொண்டனர். இதற்குச் சான்றாகப் பல கல்வெட்டுகள் இருக்கின்றன. தஞ்சாவூர் ஜில்லா, புஞ்சை என்ற ஊரில் கிடைத்த கல்வெட்டு ஒன்று சில நிலங்கள் கோயிலுக்கே உரியன என்று நிரூபிப்பதற்காகச் சில கோயில் வேலைக்காரர்கள் தீக்குளித்து உயிரைத் தியாகம் செய்து கொண்டனர் என்று கூறுகிறது. தங்கள் உரிமைகளை நிலைநாட்ட கோபுரத்தின் மீதேறிக் கீழே விழுந்து உயிர்நீத்த செய்திகளும் கோயில் சாசனங்களிலிருந்து தெரிய வருகிறது. கோயில் காரியங்கள் நடைபெறாது போனால் கோயில் வேலைக்காரர்களுக்கு ஊதியம் கிடைக்காது. அவ்வாறு கோயிற் காரியங்களை நடத்தாமல் நிர்வாகிகள் வருமானத்தைத் தாங்களே சுவீகரித்துக் கொண்டபோது வேலைக்காரர்க ளது உரிமைகளை நிலைநாட்ட கோபுரத்தின் மேலேறி கீழே விழுந்து அப்பாவு அய்யங்கார் என்பவர் உயிர்நீத்த செய்தியை இரண்டு கோயிற் சாசனங்கள் கூறுகின்றன. இவ்வாறு கிராம நல அமைப்பு முறையை எதிர்த்துச் சிற்சில போராட்டங்கள் கடந்த ஆயிர வருஷ காலமாக நடைபெற்றிருந்த போதிலும், அயல் நாட்டு வியாபாரிகளின் வருகைக்கு முன்பு A 519 - 2