பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

தமிழர் நாட்டுப் பாடல்கள்

காதலன்: வட்ட வளவிக் காரி

               வளத்தட்டு சீலக்காரி
               கோதுமை பச்சக்காரி 
               கோபம் உண்டோ என்மேலே
                நாணத்தட்ட சோளத்தட்ட 
                நாலுகைக் கம்மந்தட்ட 
                கம்மந்தட்ட வீட்டுக்காரி 
                காட்டம் உண்டோ எம் மேலே
                பல்லு வரிசைக் கல்லோ 
                பட்டுக்கரை நேத்திக் கரை 
                சொல்லு வரிசைக்கில்லோ-உன்னை 
                சொந்தமின்னு எண்ணி ருந்தேன்
                ஆனை நடையாளே 
                அமிர்த மொழியாளே 
                செல்ல நடையாளே-நான் 
                சில காலம் பிரிஞ்சிருந்தேன்
                படுத்தா உறக்கம் வல்லே 
                பாய் விரிச்சாத் துக்க மில்லே 
                உறக்கச் சடவுலயே-கண்ணே 
                உன் உருவம் தோணுதடி
                உன்னைய நம்பி யல்லோ 
                உட்காந்தேன் திருணையிலே 
                என்னைய மறந்தியானா-நீ 
                ஈடேறப் போறதில்லை
 
                வேலி அழிஞ்சுதுண்ணு 
                விறகுக்கு நீ வாடி 
                காளை ஒண்ணு தப்புச் சுண்ணு 
                காட்டு வழி நானும் வாரேன்
                இண்டு தழையாதோ? 
                இண்டம் நிழல் சாயாதோ? 
                இண்டு நிழலிலேயே-நாங்க 
                இருந்து கவி பாட
                மலையிலே மாட்டக் கண்டேன் 
                மலைக்கும் கீழே தடத்தக் கண்டேன்