பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



196

தமிழர் நாட்டுப் பாடல்கள்

பெண்: செவத்த லேஞ்சுக் கார மாமா,

             சில வாங்கித் தாங்க மாமா 
             சிலுக்குச் சீல வந்தாத் தான் 
             சிரிச்சுமே பேசிடுவேன்

ஆண்: கல்லு இடுவலில

             கவுந்து தலை பாக்கும் புள்ள 
             பல்லு இடுவலில-எனக்குப் 
             பாதரவா தோணுதடி

பெண்: ஒடையிலே ஒரு மரமே

             ஒதுக்கமான மாமரமே 
             தங்கக் கொழுந்தனுக்கு 
             தலைபாக்க ஏத்த ஓடை

ஆண்: தாளம் பூ தலையில் வச்சு

            தனி வழியே வந்தவளே 
            எவன் இருப்பான் என்று சொல்லி 
            இங்க வந்த பெண்மயிலே ! 
            ஒருத்திக்கு ஒரு மகனாம் 
            உன்னை நம்பி வந்தவண்டி 
            கையை விட்டுத் தவறவிட்டா 
            கருமம் வந்து சேருமடி

பெண்: நெலக்கடலை நாழி வேணும்

           நேரான பாதை வேணும் 
           ஜோடி மட்டம் ரெண்டு வேணும் 
           சொகுசா வழி நடக்க

வட்டார வழக்கு: சிங்குழல்-சீவிய குழல், புல்லாங்குழல்; முட்டை என்பது-காதலியை; சாவல் என்பது-காதலனை; சம்பிராயம்-வீண் பெருமை இடுவல்-இடைவெளி, ஜோடி மட்டம்-தங்களிருவரும்.

சேகரித்தவர்
இடம்
S.M.கார்க்கி
சிவகிரி


கலியான மாதத்தில் கவலை


மருதியின் அத்தை மகன் மருதன். இருவரையும் கணவன் மனைவியென்று, ஐந்து வயதிலேயே விளையாட்டாகப் பெற்