பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

தமிழர் நாட்டுப் பாடல்கள்

சின்னத் தாயே தங்கம்

ஏரிக்கரையிலே அவன்தன் காதலியைப் பார்க்கிறான். ஏரியில் நீர் நிறைந்திருப்பது போல் அவன் உள்ளமும் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கிறது. அவன் காதல் குறிப்புணர்த்திப் பாடுகிறான்!. அவனை மறுத்து அவளும் ஒவ்வொரு சொல் சொல்லுகிறாள். அவர்களது உரையாடலைப் பார்ப்போம்.

ஆண் : வத்தனத்தான் ஏரியிலே

               சின்னத் தாயே தங்கம்--ரண்டு 
               வர்ண பொறா மேயக் கண்டேன் 
               சின்னத் தாயே தங்கம்

பெண்: வத்தனாலும் குத்தமில்லை

              சின்னத் தாயே தங்கம் 
              நானுனக்கு பொண்ணு மில்லே 
              சின்னத் தாயே தங்கம்

ஆண் : இண்ணடித்தான் ஒரத்திலே

               சின்னத் தாயே தங்கம்-ரண்டு 
               கோயில் பொறா மேயக் கண்டேன் 
               சின்னத் தாயே தங்கம் 
               காடாலே ஒரு மயிலு 
               சின்னத் தாயே தங்கம்-அது 
               கட்டுப் பட்டு நிக்கு தோடி 
               சின்னத் தாயே தங்கம் 
               செடியாலே ஒரு மயிலு 
               சின்னத் தாயே தங்கம்-அது 
               சிக்குப்பட்டு நிக்குதோடி 
               சின்னத் தாயே தங்கம்

பெண்: ஆலா உளுது போல

              சின்னத் தாயே தங்கம்-நான் 
              அவித்து விட்டேன் தலை மயிரே 
              சின்னத் தாயே தங்கம் 
              மூணு காசு முட்டாயா 
              சின்னத் தாயே தங்கம்-இங்கே 
              முட்டுக் காட்டுக் கச்சேரியா
              சின்னத் தாயே தங்கம்