பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



200

தமிழர் நாட்டுப் பாடல்கள்



தங்கம் விளையும்
புஞ்ச தரிசாக் கிடக்குதடி
காட்ட உழுது போட்டேன்
கடலை போட பட்டம் பாத்தேன்
வந்த மழை போகுதில்லை
வருணனே உனது செயல்

சேகரித்தவர்:
S.M.கார்க்கி

இடம்;
நெல்லை மாவட்டம்

குளிர்ந்த முகம் தந்திடுவேன்

தண்ணீர் இறைத்துக் கொண்டிருக்கிறாள் காதலி. காதலன் அருகில் சென்று தண்ணீர் கொடு என்று கேட்கிறான். ஊர்ப் பொதுவிடத்தில் பேசுகிறோமே என்ற நாணம் அவனுக்கில்லை. அவனுக்கு புத்தி புகட்ட எண்ணி 'கூடத்துக்கு வந்தியானா குளிர்ந்த முகம் தந்திடுவேன்' என்று அவள் பதில் சொல்லுகிறாள். கூடத்திற்கு அவன் எப்படிப் போவான்? பலரறியக் கூடத்திற்குள் போக வேண்டுமானால், அவளை மணம் செய்துகொள்ள வேண்டுமல்லவா? அவள் மறைவாக அவனிடம் சொல்லுவதும் அதுதான்.

ஆண் : ஆழக்கிணத்துக்குள்ளே
               நீளக் கயிறு விட்டு
               தண்ணி எடுக்கும் புள்ள-எனக்கு
               தண்ணீரும் கொடுத்திடம்மா

பெண் : தண்ணிரும் கொடுத்திடுவேன்
                தாகமது தீர்த்திடுவேன்
                கூடத்துக்கு வந்தியானா
                குளிந்த முகம் தந்திடுவேன்

வட்டார வழக்கு : புள்ள-பிள்ளை (பெண்பால்); வந்தியானா-வந்தாயானால்,

சேகரித்தவர்
S.M.கார்க்கி

இடம்
சிவகிரி

நெல்லை மாவட்டம்