பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

      தமிழர் நாட்டுப் பாடல்கள்

        அலுக்கி நட என் சாமி


    உழுது முடித்து விட்டு வீட்டுக்கு உழவன் வருகிறான். அவன் களைப்பைப் போக்கி உற்சாக மூட்டுவதற்காக அவன் மனைவி அவனைப் புகழ்ந்துப்பாடி, நிமிர்ந்து நடந்து தங்களுடைய அரண்மனைக்கு வரும்படி அழைக்கிறாள். அவர்களுடைய வீடு சிறு குடிசையாயினும் அவர்களுக்கு அது அரண்மனைதான். அவளுக்கு அவன் ராஜா. அவனுக்கு அவள் ராணிதானே!
   வெள்ளிக் கலப்பைகளாம் 
   வெங்கலத்து மேழிகளாம் 
   வட காடு உழுது வரும் 
   வஞ்சிக் கொடி என் சாமி 
   மத்தியானம் மாடு விட்டு 
   மாட்டுக் கெல்லாம் கூளம் போட்டு 
   சாட்டக் கம்பு தோளிலிட்டு-என் 
   சாமி வரக் காணியளோ? 
   கிறிச்சு மிதியடியாம் 
   கீகண்ணுப் பாருவையாம் 
   அலுக்கி நட எஞ்சாமி-நம்ம 
   அரண்மனைக்குக் கெச்சிதமே


   சேகரித்தவர்:            இடம்: S.M. கார்க்கி               சிவகிரி, 
                 நெல்லை மாவட்டம்.
      
       நாளைப் பயணமடி
    காதலரிருவர் அன்பு மிகுதியால் ஒருவருக்கொருவர் உரையாடிக் கொள்கிறார்கள். கடைசியில் அவன் நாளைப் பயணம் என்கிறான். அவள் நானும் வருகிறேன் என்கிறாள். ஆனால் நடக்குமா?

பெண்.:

    ஆல மரமுறங்க
    அடி மரத்துக் கொப்புறங்க 
    பாதையிலே நானிருக்க-நீங்க 
    பக்க வழி போகலாமா?

ஆண்:

    வாழையடி உன்கூந்தல்
    வைரமடி பல்காவி