பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

     தமிழர் நாட்டுப் பாடல்கள்

   கோட்டுக்குப் போனாலுமே-நம்ம 
   கோடி ஜனம் கையெடுக்கும் 
   கிள்ளிய கொசுவத்துக்கோ 
   கீழ் மடியின் வெத்திலைக்கோ 
   அள்ளிய தேமலுக்கோ 
   ஆசை கொண்டேன் பெண் 
                       மயிலே! 
   மலையிலே மாட்டக் கண்டேன் 
   மலைக்கும் கீழ தடத்தக் கண்டேன் 
   செவத்தப் புள்ள கொண்டயிலே 
   செவ்வரளிப் பூவக் கண்டேன் 
   வெட்டின கட்டயில 
   வீரியமா பூத்த பூவே 
   வக்கத் தெரியாம 
   வாட விட்டேன் தேசவழி

பெண்:

   எலுமிச்சம் பழ மிண்ணு 
   எடுத்தேன் கை நெறைய 
   பச்சக் குமிட்டியல்ல 
   பாத்தவுக சொல்லலியே 
   படர்ந்த நெஞ்சாம் பருமுழியாம் 
   பாவிக்கல்லோ ஆசை கொண்டேன் 
   இலந்த முள்ள தலைமுடிய 
   இழுபடுதேன் சந்தியில 
   பாத்தனய்யா உன் முகத்த 
   பகச்சனய்யா எஞ்சனத்த 
   விட்டுப் பிரிஞ்சேனய்யா 
   விரட்டப் பட்ட மானப்போல
   வட்டார வழக்கு : முள்ள-முள்ளை.
  சேகரித்தவர்:              இடம்:

S.M. கார்க்கி சிவகிரி

                   நெல்லைமாவட்டம்
   
         உன்  மயக்கம்
   ஓரிளைஞனும், ஒரு இளமங்கையும் காதல் மயக்கத்தில் ஆழ்ந்து உரையாடுகிறார்கள். அவர்களுடைய உள்ளக் கிளர்ச்சிகளை வெளியிடப் பயன்படுத்தும் உவமைகளும் ஒருவரையொருவர் அழைத்துக் கொள்ளப் பயன்படுத்தும் விளிச்சொற்களும்

சுவையாக இருக்கின்றன.