பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



காதல்

215


விட்டு வேறொரு இளஞனைத் தேடிச் செல்லுகிறேன், என்று கூறி அவனுக்குப் பொறாமையூட்ட முயலுகிறாள். அவன் முன்னைய இன்ப நிகழ்ச்சிகளை நினைவூட்டி அவளைச் சமாதானப்படுத்த முயலுகிறான். முடிவு நமது ஊகத்துக்கு விடப்பட்டுள்ளது.

முத்தம்மாள்: கொத்த மல்லித் தோட்டத்திலே
              குளிக்கப் போயி நிக்கையிலே 
              அத்தை மகன் முத்துசாமி 
              அத்தெரிந்தான் பிச்சிச்சரம்
முத்துச்சாமி: சத்திரத்துக் கம்மாயிலே
              மொச்சி நெத்-தெடுக்கையிலே 
              குத்துக் கல்லு மேலிருந்து-நான் 
              கூப்பிட்டது கேக்கலியோ?
              கூடைமேலே கூடை வச்சு 
              குமரிப் புள்ளே எங்க போற

முத்தம்மாள்: ஏழுமலை கழிச்சு-ஒரு
              எள வட்டத்தைத் தேடிப்போறேன்
முத்துச்சாமி: பாக்குத் துவக்குதடி
              பழய உறவு மங்குதடி 
              ஏலம் கசக்குதடி 
              என்னை விட்டுப் போறதுக்கோ?

வட்டார வழக்கு : நிக்கையிலே - நிற்கையிலே; மொச்சி - மொச்சை அத்து - அறுத்து.

சேகரித்தவர்:
இடம்:
S.M.கார்க்கி
சிவகிரி

மருமகனாய் ஆனதென்ன?

அடுத்த வீட்டுப் பையன் தன்னை 'அம்மா, அம்மா' என்று அருமையாக அழைப்பவன். அவளுக்கு ஒரே ஒரு மகள். காட்டுக்கு ஈச்சஞ் சுள்ளி பொறுக்கப் போனவள் வெகுநேரம் கழித்துத் திரும்பினாள். கண்னெல்லாம் சிவந்திருந்தது. எதையோ மறைப்பவள் போல சட்டென்று வீட்டினுள் போய்விட்டாள். தாய் மகளது தோற்ற மாறுதலைக் கண்டு கொண்டு அவளிடம் காரணம் கேட்கிறாள். அவள் வெட்கத்