பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

249

காதல்


சந்திரரே சூரியரே
சாமி பகவானே
இந்திரருக்கு இணையவரை என்ன சொல்லிக் கூப்பிடட்டும்? படுத்தாப் பல நினைவு பாயெல்லாம் கண்ணிரு சண்டாளன் உன் நினைவால் தான் சருவா உருகுறனே
வேப்ப மரத்தோரம்
வெட்டரிவாள் சாத்தி வச்சேன் வெட்டருவா சாஞ்சன்னைக்கு விட்டேனையா உன் உறவு பொட்டலிட்ட பூபோல
பொருந்தி விட்ட நாமம் போல இப்பம் விட்ட பூப்போல
இருந்து மடியுதனே
ஆவரம்பு பூப் போல
ஆறு வருஷம் சிறையிருந்தேன் இன்னும் சிறை யிருக்க
என்னாலே முடியாதையா

சேகரித்தவர்:
இடம்:
M.P.M. ராஜவேலு
தூத்துக்குடி வட்டாரம்,
நெல்லை மாவட்டம்.

கிடைக்குமுண்ணு எண்ணாதீங்க

காதலன் ஆடம்பரக்காரன். அவனை மணந்து அவள் சுகம் பெறப் போவதில்லையென்று வேண்டியவர்கள் சொல்லுகிறார்க ளாம். காதலி அவனிடம் இவ்வாறு கூறுகிறாள்.

அவள்:

 அரைக்கீரை சிறு பாத்தி காலரையும் தூக்கிவிட்டு நிக்காங்க எங்க மச்சான் இன்பமாய் தலைப்பாக்கட்டி பொட்டிடுமோ உங்க நேர்த்தி பொருந்திடுமோ என் சதுரம் விட்டுவிடு என்று சொல்லி வேணவர்கள் சொல்லுதாங்க