பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
258

தமிழர் நாட்டுப் பாடல்கள்

மழைக்கால இருட்டிலே மாரளவு நாணலிலே ஒத்தையிலே போவாயோடி ஒருவன் கைப் பத்தினியே? கடுவு உறவானோம் கண்டொரு நாள் பேசினோமே இன்னொரு நாள் பேசுதற்கு இரங்கலையே உன் மனசு!

காதலி:

கானம் கருத்த கானம் கறிக் கேத்த கொத்தமல்லி மானங் கெட்ட மச்சாவிக்கு மாதம் ஒரு வைப்பாட்டியா? காத்துட்டுக்குக் கடலை வாங்கி கழுகுமலை திருனாப் பாத்து மிச்சக் கடலை இருக்கு-நம்ம மச்சாவியக் கூப்பிடுங்க பாக்குத் துவக்குதடா பழமை உறவு மங்குதடா ஏலம் கசக்குதடா-நம்ம இருவரும் போற பாதை மருதையிலே தேவதாசி
மான் மயிர் சேலைக்காரி ஆனைமேலே கும்பம் வச்சு ஆடுறாளே தேவதாசி

காதலன்:

லேஞ்சு விரிச்சலடி நேரே தலை வச்சுறங்கி என்ன விட்டுக் கண்ணசர என்ன மனம் கொண்டியடி படுத்தா பல நினைவு பகல் நிறைஞ்சாக் கண்ணிரு உறக்கச் சடவிலயும் உன் நினைவாத் தோணுதடி படுப்பேன் எந்திருப்பேன் பாதவத்தி உன்னாலே காலு ரெண்டும் கல்லுத் துணு-உன் மேலு ரெண்டும் எண்ணெய்க்குடம்