பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல் 271 கூட வெலையானா உனக்கு கொப்புப் பண்ணித் தாரேன் சாட்டு மேலே சாடு வெச்சு, சமயவரம் போற பொண்ணே சரட்டு வெலையானா உனக்கு சரடு பண்ணித் தாரேன் வட்டார வழக்கு: கொப்பு-மேல்காதில் அணியப்பெறும் நகை; சரடு-கழுத்திலணியும் ஆபரணம்; சாடு-கூடையை விட இருமடங்கு பெரிதாயுள்ள கூடை உதவியவர்: இடம்: C. செல்லம்மாள் பொன்னேரிப்பட்டி, சேகரித்தவர்: சேலம் மாவட்டம். கு. சின்னப்ப பாரதி நான் போறேன் முறைப் பெண், முறைமாப்பிள்ளை என்ற உறவு ஒருவருக்கு மணமான பின்பும் நீடிக்கலாம். அப்பொழுது நெருக்கமான காதல் பேச்சுக்கள் பேசிக்கொள்ளும் உரிமை அவர்களுக்கு உண்டு. ஆனால் உடலுறவு கொள்வதே தவறெனக் கருதப்படும். இப்பேச்சுக்கள் மனைவி முன்போ, கணவன் முன்போ நடை பெறலாம். இவ்வழக்கம் இப்பொழுது மறைந்து வருகிறது. ஏனெனில் மணம், உறவு முறைகளை மீறி சொத்துரிமையின் அடிப்படையிலே நடைபெறுகிறது. பெண்ணும் குடுத்துடுவா...'நான் உனக்குக் கணவனாகும் பேறு இல்லை. உன் மகனுக்கு எங்கள் பெண்ணைக் கொடுப்போம். என் மகனுக்கு உன் பெண்ணை எடுப்போம் என்ற உறவு வகையில் பாடல் அமைந்துள்ளது. முறைப்பெண்: எண்ணெய்த்தேச்சி தலைமுழுகி என் தெருவே போற மச்சான் ஆசைக்கு ஒரு நாளைக்கு அனுப்புவாளோ உன் தேவி