பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணம்

297


குதிரையடன் பல்லக்கும்
குறையாத செல்வமும்
ஆல் போல் தழைத்து
அருகு போல் வேரோடி
மூங்கில் போல் கிளைகிளைத்து
மகிழ்ச்சியால் வாழ்ந்திருக்க
மக்கள் பதினாறும் பெற்று
மகிழ்ச்சியாய் வாழ்ந்திருக்க
மங்கல நாண்பூட்ட
மகிழ்ந்தார்கள் எல்லோரும்
சுடர் வாழி முனிவர்கள்
கின்னரர்கள் வாழி
பாடுவோர், கேட்போர்
பதிவாழி !
பதி சுப்ரமணிய வாழி !
நகர் வாழி ! நாடும் சிறக்க
நனி வாழி
உய்யமா நதிமுதல்
தையல் பெண்ணாள் வாழி
வாழி வாழி என்று
வரமளித்தார் ஈசுவரனார்.

குறிப்பு: இது கோவை மாவட்டத்தில் பாடப்படும் வாழ்த்து. கம்பர் மரபினர் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் நாவிதர் பாடுவார். கவுண்டர்களில் பல கிளைகள் உள்ளன. அவரவர் கிளைக்கு வெவ்வேறு பாடல்கள் உள்ளன. எல்லாப் பாடல்களும் நாவிதர்களால் பாடப்படுவது.

சேகரித்தவர்:

இடம்;

கு. சின்னப்ப பாரதி

கோவை மாவட்டம்