பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடும்பம்

307



பாவக் கொடி பந்தலில்

பழுத்ததடி காதோலை

.

வட்டார வழக்கு: சேப்பு-சட்டைப்பை; பாவக் கொடி-பாகற் கொடி.

சேகரித்தவர்
இடம்
S.S. போத்தையா
நெல்லை மாவட்டம்

பேயனுக்குவாழ்க்கைப்பட்டேன்

பல ஊர்களில் அவளுக்கு முறை மாப்பிள்ளைகள் இருந்தனர். அவர்களுடைய பெற்றோர் பெண்ணின் அழகை மதித்து பெண் கேட்டனர். ஒரு ஆண்டு கழியட்டும் என்று பெண்ணின் பெற்றோர் திருமணத்தைத் தள்ளி வைத்தனர். அதற்கும் ஒப்புக்கொண்டு மறு ஆண்டிலும் கேட்டனர். அவளுக்கு ஒரு மாமன் மகன் மீது ஆசை. ஆனால் அவர்களையெல்லாம் ஒதுக்கி விட்டுப் பணம் இருக்கிறதென்று எண்ணி, ஒரு பேயனுக்கு அவளைக் கட்டி வைத்து விட்டனர். அவன் அவளைப் படாதபாடு படுத்தினான். அவள் தாய் வீடு திரும்பினாள். தன் மாமன் மகனைக் கண்டாள். அவளுடைய மனக்குறை அவனுக்குத் தெரியும்படி பாடுகிறாள் {{block_center|

            முக அழகைப் பாத்துக்கிட்டு முத்தையாபுரத்தில் கேட்டாங்க பல்லழகைப் பாத்துக்கிட்டு பாண்டியா புரத்தில் கேட்டாங்க வாயழகைப் பாத்துக்கிட்டு வல்ல நாட்டில் கேட்டாங்க காலழகைப் பாத்துக்கிட்டு கைலாசபுரத்தில் கேட்டாங்க மாட்டேன் இன்னு சொன்னதுக்கு மறு வருசமும் கேட்டாங்க மாமன் மகனிருக்க மாலையிடும் சாமி இருக்க பேசும் கிளி நானிருக்க பேயனுக்கு வாக்கைப் பட்டு பெரும் கஷ்டத்துக்கு ஆளாச்சே!