பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 குடும்பம் 331

கொழுந்தி:ஏறாத மலைதனிலே

         இலந்தை பழுத்திருக்கு 
         ஏறி உலுப்புங்களேன் 
     இளைய கொழுந்தன் மாரே

கொழுந்தன்: ஏறி உலுப்பிடுவேன்

  இங்கும் மங்கும் சிதறிடுவேன் 
  பார்த்துப் பிறக்குங்க 
  பாசமுள்ள மதினிமாரே

கொழுந்தி: இலந்தைப்பழம்போல

 இருபேரும் ஒரு வயது
 கொழுத்த புள்ள நான் வாரேன் 
 கொண்டனைச்சிப் போயிருங்க

கொழுந்தன்; கொண்டும் அணைச்சிருவேன் கொடுங்கையிலே ஏந்திருவேன் சரியான கொங்கைக்குச் சட்டம் பொருந்தாதே சித்தருவா கொய்யாதோ சிறு மிளகு உறையாதோ சிறுவன் கொடுத்த காசு செல்லாதோ உந்தனுக்கு

கொழுந்தி: செம்மறி வீசக்காரா செவத்த மச்சான் ஏ கொழுந்தா செத்த வளர்ந்தி யிண்ணாச் சேந்திருவேன் உன் மேலே புதுப்பானை கருப்பழகா போர்மன்னா தன்னழகா சிரிப்பாணி ஏ கொழுந்தா தினம் வருவாய் இந்த வழி செந்தட்டிக் கொழுந்து போல சிரிப்பாணி ஏ கொழுந்தா இன்னும் கொஞ்சம் வளர்ந்தியானா இறந்தாலும் மறப்பதில்லை

வட்டார வழக்கு: பிறக்குங்க - பொறுக்குங்கள்; போயிருங்க -போய் விடுங்கள்; சட்டம் - உடல்; சித்தறுவா