பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 குடும்பம் 333

வாரானாம் வேலுச்சாமி வாச லெல்லாம் பூ மணக்க நடுவிட்டு வாசலில லட்ச சனம் கூடி ருக்கும் வேலுச்சாமி இல்லாம விரிசீணு இருக்குதய்யா வாச நிறைஞ் சிருக்கும் வந்த ஜனம் சூழ்ந்திருக்கும் நடு வீட்டு வேலில்லாம நல்லாவும் இல்லையப்பா கடுமையா உறக்கத்தில கணக்கான துக்கத்தில கூப்பிட்ட சத்தத்தில வேலுச்சாமி குயிலுப் போல வந்திருவார் சாஞ்சு நடநடந்து சைசான கொண்ட போட்டு போறாராம் வேலுச்சாமி பொன்னு முடி களஞ்சியமே ஊருக்கும் பொருந்திருக்கும் உலகத்துக்கும் ஒத்திருக்கும் நாட்டுக்கும் பொருந்திருக்கும் நடுவிட்டு வேலுச்சாமி ஊருக்கும் பொருந்தாத ஒட்டச் சளவடட நாட்டுக்கும் பொருந்தாத நடு வீட்டு ஆதின முளகி

 வட்டாரவழக்கு:காப்பரவு-தோட்டவெளி;துறவுகோல்

திறவு கோல்; டானாக் கம்பு-வளைந்த கம்பு; கிண்ணரி-ஒரு வகை மேளம், சைசான-அழகான சளவட்ட-வீண் பேச்சு பேசுபவன்; ஆதின முளகி - ஒருவரின் பெயர். சேகரித்தவர்: இடம்: S.M.கார்க்கி சிவகிரி.

     வெற்றிலைப் பாக்கு
ஊரில் திருவிழா. வெற்றிலைப் பாக்குக் கடைக்காரன் தன் கடை வெற்றிலை, பாக்கு, புகையிலையின் சிறப்பைப் பாடுகிறான். A519 - 22