பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் 359 சிவகாசிக் கொள்ளை-4 வந்தது பாரீர் சிவகாசிக் கொள்ளையின் வன்மையைப் பாரீர் தந்தது பார் எழுபத்தைந்தாம் ஆண்டு வளரும் வைகாசி மீ 25-உ இந்தச் சமாச்சாரம் நாடாக்கமார் கேட்டு எல்லோரும் ஒன்றாக மீட்டிங்கி பேசி எழுதினார் கடிதம்-கண்டவுடன் ஏகினார் துரிதம் வந்தது இங்கிலிஷ் துப்பாக்கிக் குண்டு மருந்துகள் ஈட்டி சமுதாடு நீட்டும் வல்லாயுதம் என்னென்ன விதமாய்-பந்தோபஸ்து உன்னிதமாய் பயங்கரம் இல்லாமல் கூட்டங்கள் கூடி தெருக்களை நாட்டமாய் மூடி இல்லம் தோறும் தயார் செய்து இதமாகவேதான் இன்ன விதமாக நோட்டீஸ் வந்ததென்று எழுதியும் அர்ச்செண்டாய் தந்தி கொடுத்தபடி கலெக்டரும் வந்தார் போலீஸ்காரரும் கட்டாயமாய் இருந்தார் பின்னும் எங்கெங் கிருந்துமே நாடார்களில் சிலர் ஏகிச் சிவகாசி நாடார்க் குதவியாய் வந்துமிருந்தார்-பொருள் சிலர் தந்துமிருந்தார் இன்னும் ஏராளமாகவே சண்டை செய்ய துணிந்து இருக்கும் நாடார்கள் ரகசியம் எல்லாம் எண்ணியறிந்தார் தந்திரங்களெல்லா மறிந்தார் உடனே உடனே இருக்கின்ற பேர்களுக்குத் தைரியும் சொல்லியே ஏகமாக வெண்டர் பிள்ளை பட்டணம் சென்று நாட்டனைப் பிடித்தார் ரிக்காடுகள் நோட்டுடன் முடித்தார் இங்கு ஏலேல சிங்கன் வெள்ளையத் தேவரும் இன்னும் சிலபேர்கள் சண்டைக்கு எத்தனம் செய்யத் துணிந்து திருநெல்வேலி ஜில்லா முழுமை மலையாளம் சேர்ந்த ஆறாம் புளிக்கோட்டைவாசல் முதல் நடந்ததே கொள்ளை ஜனங்களுக்குத் தொடர்ந்ததே சள்ளை தூத்துக்குடி மலையாளம் திருநெல்வேலி